07-23-2005, 10:10 PM
உரிமை மறுக்கப்பட்டிருக்குமானால் தற்கொலைக் போராளிகளை இங்கிலாந்தில் உருவாக்கியிருப்போம்-லண்டன் மேயர்
Saturday, 23 July 2005
--------------------------------------------------------------------------------
குண்டுகளின் மறுபக்கம்
லண்டன் மாநகரில் 50க்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்று சரியாக இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மீண்டும் நான்கு குண்டுகள் சுரங்க ரயில்களிலும் பஸ்ஸிலும் வெடித்திருக்கின்றன. உயிரிழப்போ அல்லது பாரிய சேதமோ ஏற்படவில்லையென்றாலும், முன்னரைப் போன்று தங்கள் அன்றாட வாழ்க்கை பாதுகாப்பானதாக இருக்கப்போவதில்லை என்று லண்டன் வாசிகள் அஞ்சுகின்ற ஒரு நிலைமையை இக்குண்டு வெடிப்புக்கள் தோற்றுவித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
அடுத்து குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகப் போவது யார் என்ற கேள்வியுடன் முழு ஐரோப்பிய நாடுகளுமே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உஷார் நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் இந்தப் பீதி நாளடைவில் அங்குவாழும் ஆசிய குடியேற்றவாசி சமூகங்களுக்கு எதிரான பழிவாங்கும் உணர்வாக உருவெடுக்கக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்த காலனித்துவ கடந்த காலத்தைக் கொண்ட பிரிட்டன் போன்ற நாடுகளில் குடியேற்றவாசி சமூகங்களுக்கு எதிரான உணர்வுகள் மிக சுலபமாகக் கிளம்ப முடியும். தஞ்சம் கோருபவர்கள் போன்று பாவனை செய்து `பயங்கரவாதிகள்' ஐரோப்பிய நாடுகளுக்குள் பிவேசிப்பதற்கு முயற்சிக்கக்கூடும் என்ற சந்தேகம் உண்மையான அகதிகளுக்கு நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய தஞ்ச வாய்ப்புக்களை பாதிக்கக்கூடிய துரதிர்ஷ்டவசமான நிலையையும் உருவாக்கக்கூடும்.
இதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் அமெரிக்காவின் உற்ற துணையாக விளங்கும் பிரிட்டன் பயங்கரவாதப் பிரச்சினையின் மறுபக்கத்தை இனிமேலும் திரும்பிப்பார்ப்பதற்கு தயங்கினால் நிலைவரம் மேலும் மோசமடையுமே தவிர, வேறு ஒன்றுமாகப்போவதில்லை. ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு பிரதமர் ரொனி பிளயர் அளித்துவரும் ஆதரவே லண்டன் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று மூன்றில் இரண்டு பங்கு பிரிட்டிஷ் மக்கள் நினைக்கிறார்கள் என்று இவ்வாரம் லண்டன் கார்டியன் பத்திரிகையில் வெளியான அபிப்பிராய வாக்கெடுப்பொன்று தெரிவித்திருக்கிறது. ஈராக் போர் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுடன் சேர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்த பிளயர் ஈராக் நெருக்கடிக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் இடையேயான தொடர்பை நிராகரிக்கிறார்.
`பயங்கரவாதம்' ஒரு வெற்றிடத்தில் செயற்படுவதில்லை. இன்று மேற்குலகம் எதிர்நோக்கும் இந்த நெருக்கடிக்கு காலனித்துவம் தொடக்கம் பாலஸ்தீன நெருக்கடி வரையான காரணிகள் செய்திருக்கும் பங்களிப்பை புஷ்ஷோ பிளயரோ ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இஸ்லாமியத் தீவிரவாதம் என்று தாங்கள் வர்ணிப்பதை அரசியல் பிரச்சினைகளில் இருந்து விலக்கியே இவ்விருவரும் உலகுக்கு விளக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில், `பயங்கரவாதம்' ஒரு மதப் பிரச்சினையல்ல. அடிப்படையில் அரசியல் பிரச்சினையே. அது அரசியல் தீர்வையே வேண்டி நிற்கிறது. அரசியல் நிலைப் பாடுகளுக்கு ஆதரவாக அணிதிரட்டுவதற்காக மத உணர்வு தவறான முறையில் பயன்படுத்தப் படுகிறது என்பது வெளிப்படையானது. அதற்காக அடிப்படையில் பிரச்சினைகளில் இருக்கும் அரசியல் தன்மையை அலட்சியம் செய்வது விபரீதமானது. வட அயர்லாந்து நெருக்கடி கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்துக்காரர்களுக்கும் இடையிலான ஒரு அரசியல் - சமூகப் பிரச்சினை. அங்கு ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் தாக்குதல்களை `கத்தோலிக்கத் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்' என்று நாமகரணஞ்சூட்டுவதற்கு கனவிலும் நினைத்துப் பார்க்காத பிளயரினால் `இஸ்லாமியப் பயங்கரவாதம்' பற்றி எந்த முன்யோசனையுமின்றி சுலபமாகப் பேச முடிகிறது.
இக்கட்டத்தில் லண்டன் மாநகரின் மேயர் கென் லிவிங்ஸ்ரன் ஒரு சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்தை கவனிப்பது பொருத்தமாக இருக்கும்- `மேற்குலகின் வெளியுறவுக் கொள்கையே இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்க்கிறது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் கீழ் நாம் இருந்திருப்போமேயானால், எமது விவகாரங்களை நாமே நிர்வகிப்பதற்கான உரிமை எமக்கு மறுக்கப்பட்டிருக்குமானால், வேலை செய்வதற்கான உரிமையும் வாக்களிப்பதற்கான உரிமையும் மூன்று சந்ததிகளுக்கு எமக்கு மறுக்கப்பட்டிருக்குமேயானால், பெரும் எண்ணிக்கையான தற்கொலைக் குண்டுப் போராளிகளை நாம் இங்கிலாந்தில் உருவாக்கியிருப்போம்'.Thinakkural