10-10-2003, 10:31 PM
யாழ்/yarl Wrote:பாப்பம் இனி அரசாங்கம் என்ன வெடி கொழுத்துகிறது என...
[size=14]இலங்கையின் வாக்குகளைப் பெறுவதற்காக சமாதானத்தை விட எந்தவொரு பாச்சாவையும் எந்த ஒரு கட்சியும் முன் வைத்தல் தன் தலையில் தானே நெருப்பைக் கொட்டிக் கொள்வது போன்றது. அரசாங்கம் என்று சொல்வதை விட ஆளும் ரணில் குழுவினர் நிச்சயம் சமாதானத்துக்கு எதிராக எதுவும் செய்யப் போவதில்லை.மக்கள் வேண்டுவது சமாதானத்தையே தவிர யுத்தத்தையல்ல.
சந்திரிகா தரப்பும் அதைத்தான் நினைக்கிறது.அதுதான் JVPயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்கான காரணம். அடுத்த இலங்கையின் அதிபராகும் நிலை ரணில் தரப்பினருக்கு கிடைக்கும் போல இருக்கு என அணுரா பண்டாரநாயக்க, உட் கட்சிக்குள்ளேயே சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார்.
உண்மைதான். இலங்கையின் வளர்ச்சிக்கு தமது இரத்தத்தை வியர்வையாக்கி அழிந்து போன மலையக இந்திய வம்சாவழியினருக்கு இலங்கை குடியுரிமையைக் கொடுக்க 50 ஆண்டுகளாகு மேலாகியிருக்கிறது. இது ஒன்றும் பெருமைப்பட வேண்டிய விடயமல்ல,வெட்கப்பட வேண்டிய விடயமென்று ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தமது கொதிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.
UNP இவர்களது குடியுரிமையை பெறவிடாது ஆரம்பத்தில் தடுத்தது.அவர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதியவர்கள் எமது தமிழர்கள்.அதுவே பாராளுமன்றத்தில் குறைவான தமிழர்கள் எண்ணிக்கையில் அங்கத்துவம் பெறுவதற்கு வழி வகுத்தது.........................
ஆனால் அதே கட்சியினரே அதற்கு பரிகாரம் தேடியிருக்கிறார்கள்.அவ்வளவுதான்.எனவே மலையக வாக்குகள் நிச்சயம் இக்குழுவுக்கேயாகும். ரணில் குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தரப்பும் இக்குழுவில் இருந்து பிரியப் போவதில்லை.
என்ன இருந்தாலும் ரணில் பகுதியில் ஒருவர் எதிர்கால அதிபர் கதிரையில் உட்காருவது மட்டும் உறுதி.
சந்திரிகாவுக்கு 3வது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதைவிட அணுரா சேரும் கட்சிகள் எப்போதும் தோல்வியை தழுவுவது உறுதி. அணுராவே அதிபர் போட்டியாளரானால்???????????

