07-23-2005, 08:11 AM
Quote:பி.கு: இதே போன்றுதான் மேற்குலக நாடுகளால் முஸ்லீங்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற தொடர் பிரச்சாரங்கள்தான், மேற்கில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு வித்திட்டிருப்பது வெளிப்படையான உண்மை.மேற்குலகில் முஸ்லீம்கள் அடக்கப்படவில்லை ஆனால் தம்மை விட முஸ்லீம்கள் முன்னேற கூடாது என்பதில தான் மேற்க்குலகம் கவனம் செலுத்துகிறதே தவிர அவர்கள் முஸ்லீம் பயங்கர வாதத்தை எதிர்கவில்லை. இது மேற்க்குலகில் என்றால்....ஈழத்தில் நிலமை தலை கீழ். ஈழத்தில் முஸ்லீம்களில் இரண்டு பிரிவினரை நாம் இனம் காணலாம். ஒன்று தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் மற்றது இலங்கை தேசியத்துக்கு ஆதரவானவர்கள். இதில் வியப்புக்குரிய விடையங்கள் பல மாவனல்லையில் முஸ்லீம்களுக்கெதிராக சிங்களவன் காடைத்தனம் புரிந்தான் அதற்காக தமிழர்களும் போரங்களை நடர்ததினார்கள் அல்லது முஸ்லீம்களின் போராட்டங்களில் பங்கு பற்றினார். அதே போல ஈராக் சண்டையை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் ஒர் ஊர்வலம் நடந்தது அதன் பின் தான் கொழும்பில் நடந்தது. இதிலிருந்து இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் தமிழ் தேசியத்தை நன்கு உணர்ந்து விட்டார்கள் ஆனால் சிலர் இன்னும் அதை உணரவில்லை அதற்க்கு காரணம் அரசியல். இந்த அரசியல் வாதகளுக்கு இப்பொது தேவை முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும். அதில் தாங்கள் குளிர் காய வேண்டும். ஆனால் இவர்கள் எதிர் பார்ப்பதை செய்வதில் இரண்டு பிரதான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று யாருக்கு எதிராக போரிடுவது? இரண்டு விடுதலைப்புலிகளை விஞ்சி இலங்கையில் இன்னோர் சுயதீன அமைப்பு அவர்களுக்கெதிராக ஆயுத ரீதியில் இயங்க முடியுமா? இரண்டுக்குமே பதில் காண்பது கடினம். முஸ்லீம்கள் சிங்களதேசத்திற்கெதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் போராடினால்.... தமிழருடன் சிங்களதேசம் கூட்டு சோர்ந்து அவர்களை அழிக்க முடிவு செய்யும் அதே போல இராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கொதிராக போராடினால்...இரவோடு இரவாக உறுப்பினர்கள் காணமல் போய் விடுவார்கள்.....ஏனெனில் புலிகளில் திறனுக்குள் இராணுவமே தாக்கு பிடிக்காத நிலையில் இவர்கள் என்ன செய்ய முடியும்? இதை விடுத்து லண்டன் அமெரிக்கா போன்று தற்கொலை தாக்குதல்கள் மூலம் தமிழரை அழிக்க நினைத்தால் அது அவர்களுக்கே பாதகம் ஏனெனில் தற்கொலைப்படையணியை தனிப்பெரும் படையணியாக கொண்ட ஒரே அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, உலகில் இவர்களை தவிர வேறென்த அமைப்பும் தற்கொலைப்படையணி (கரும்புலிகள்) என்ற ஒன்றை தனியோரு படையணியாக வைத்திருக்கவில்லை. எனவே தற்கொலைத் தாக்குதல் நடாத்த முற்ப்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்பது புலிகளுக்கு தெரிந்த விடையம் அதை விட வேற்று நாட்டவரை அழைத்து இங்கு சண்டை பிடிக்க நினைத்தால்.. அதற்க்கு இலங்கை அரசும் ஆதரவு கொடுத்தால்... சிதைந்திரக்கும் தமிழர்களுக்குள் ஒற்றுமை வருவதுடன் . அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் அத்தோடு இந்தியா போன்றன புலிகளுக்கு கரம் கொடுக்கும் எனவே முஸ்லீம்கள் இலங்கையில் ஆயுதப் புாராட்டம் நடாத்துவது என்பது வெறும் வார்த்தை ஜாலமேயன்றி வேறொன்றும் அல்ல.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

