07-22-2005, 07:13 PM
<span style='font-size:22pt;line-height:100%'><b>லண்டனில் நேற்றைய தாக்குதல்களின் சூத்திரதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் படங்கள் வெளியிடப்பட்டன</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41333000/jpg/_41333025_suspect_four_203x152.jpg' border='0' alt='user posted image'>
லண்டனில் நேற்று குண்டுத் தாக்குதல்களை நடத்த முயன்று தோற்றுப் போனதாகக் கூறப்படும் நால்வரின் படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பொது இடங்களில் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராக்களின் மூலம் பெறப்பட்ட மிகவும் விபரமான படங்கள் இங்கு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன.
இரு வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் இடம்பெற்ற, 50க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான குண்டுத் தாக்குதல்களைப் போலவே நேற்றைய தாக்குதல்களும் திட்டமிடப்பட்டிருந்ததாகப் பொலிசார் கூறுகிறார்கள்.
இது தொடர்பான புலன்விசாரணைகள் மிகவும் வேகமாக நடந்தன என்று அவற்றை உயர் பொலிஸ் அதிகாரிகள் விபரித்துள்ளனர்.
இந்த தாக்குதல் முயற்சிகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் லண்டனின் மூன்று இடங்களிலும் பொலிசார் தேடுதலில் ஈடுபட்டனர்.
-----------------------------------------------------
<img src='http://news.bbc.co.uk/media/images/41331000/jpg/_41331737_tube_ap.jpg' border='0' alt='user posted image'>
<b>லண்டன் தாக்குதலை அடுத்து மேற்கு நாடுகள் பாதுகாப்பை பலப்படுத்துகின்றன</b>
லண்டன் குண்டுவெடிப்பை அடுத்து மேற்கு நாடுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
லண்டனில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் தத்தமது பாதுகாப்பினை பலப்படுத்திவருகின்றன.
இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெரலொஸ்கொனி அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளின்படி, கணனி இணையங்கள்(இண்டர்நெட்) மற்றும் தொலைபேசி வலைத் தொடர்புகள் அனைத்தும் இனிமேல் கண்காணிக்கப்படும்.
சந்தேகப் பேர்வழிகளைத் தடுத்து வைக்கவும், அவர்களை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அதியுயர் அதிகாரங்கள் கொண்ட ஒரு வழக்குரைஞரை நியமிக்கவும் இத்தாலி பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரான்ஸ்ஸில் தற்போதைப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வன்மைவாதச் சக்திகளை மேலும் உன்னிப்பாகக் கண்காணிக்க பிரஞ்சுப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சுரங்க ரயிலிலும், பேருந்துகளிலும் பயணிகள் மீது பொலிசார் திடீர் சோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.</span>
BBC news