07-22-2005, 04:48 PM
<b>குறுக்குவழிகள் - 95</b>
$NtUninstallKB8909537$ என பெயர்கொண்ட போல்டர்களின் முக்கியத்துவம் என்ன?
விண்டோஸ் XP யில் Hotfixes, Updates ஒவ்வொரு தடவையும் நிறுவப்படும்போது அவை ஏதாவது குழறுபடி செய்தால் அல்லது தேவையில்லை என பின்னொருபொழுதில் நீங்கள் கருதினால் அழித்துவிடுவதற்கு வசதியாக மேற்கூறப்பட்ட போல்டர்கள் Windows,Winnt போல்டரினுள் நிறுவப்படுகின்றன. Windows அல்லது Winnt போல்டரை திறந்து பார்த்தால் இவை அவலஷணமாக ஒன்றன்கீழ் ஒன்றாக ஒரேமாதிரியாக நிறைய காணப்படும். இவை என்ன? அழித்துவிடலாமா? என நாம் யோசிப்போம். Hotfixes, Updates நிறுவப்பட்டு பல நாட்களின்பின் குழறுபடிகள் ஏதும் இல்லையாயின் கண்டிப்பாக இந்த போல்டர்களை அழித்துவிடலாம். குழறுபடிகள் இல்லையாயின் யாரும் எக்காலமும் இந்த உபயோகமான Hotfixes ஐ அழிக்கப்போவதுமில்லை. மேற்கூறப்பட்ட Uninstall போல்டர்களை பாவிக்கப்போவதுமில்லை.
இந்த இலக்கங்களை கொண்ட போல்டரின் பெயரின் மத்தியில் Q என்ற எழுத்து காணப்படின் அது Hotfix ஐயும் KB என்ற எழுத்து காணப்படின் Updates ஐயும் குறிக்கும். இந்த போல்டரினுள் ஏற்கனவே நிறுவப்பட்ட Hotfixes ஓ அன்றி Updates ஓ கிடையாது. இவைகளை அழிப்பதற்கான் வழி மாத்திரம் உள்ளன. Add/Remove புறோகிறாமில் இந்த Hotfixes, Updates ஐ அழிப்பதற்கான கட்டளைச்சொல் இருந்து அதை நாம் பயன்படுத்தும்போது அதற்கு வேண்டிய வழிமுறைகள் இந்த போல்டர்களின் உள்ளிருந்துதான் வருகின்றன.
இந்த போல்டர்களை நீங்கள் Select பண்ணி Delete பண்ணலாம். Windows மற்றும் Winnt யில் இந்த போல்டரை அழித்தபின் ஆனால் இதற்குரிய அல்லது இதனோடு சம்பந்தப்பட்ட குறிப்பு Add/Remove புறோகிறாமில் இருந்தால் அதை அழிப்பதற்கு Registry திறந்து சில அழிவுகளை செய்யவேண்டிவரும். இந்த போல்டர்களை ஒரேயடியாக அழித்துவிடாதீர்கள். Recycle Bin ல் சிலகாலத்திற்கு போட்டு வைத்து Restore பண்ணவேண்டி நிச்சயம் வராது என கண்டபின் அங்கிருந்து அகற்றிவிடுங்கள். உங்கள் Hard disk ல் நிறைய இடமிருந்தால் அழிக்காமல் விட்டுவைத்தாலும் பரவாயில்லை.