10-10-2003, 03:54 PM
பிரித்தானிய அரசைப் பொறுத்தவரை நம்மவர்கள் விடயத்தில் அது ஒவ்வரு தனிப்பட்டவரின் வழக்குகளை தனிப்பட்ட முறையிலேயே பார்க்கிறார்கள். சிறீ லங்கா பாதுகாப்பான நாடு என்று ஏற்கனவே உள்நாட்டமைச்சு தீர்மானித்த விட்டது. பீஆர் கிடைச்சவை பேய்வாறதாலையோ அல்லது அரச காசில் தங்கியிருப்பதோ அவர்களின் முடிவை தீர்மானிப்பதில்லை. மாறாக தமது வழக்கை சம்பந்தப்பட்டவர்கள் அக்கறை எடுத்து வடிவாக எழுதி அதை தகுந்த முiயியில் கொடுக்கவேண்டும். அப்படி கொடுத்தாலும் அது வெருக்கு தனிப்பட்ட முறையில் நாட்டுக்க திரும்பிச் செல்வது ஆபத்தானது என்பதை நீரூபிக்க வேண்டும். அண்மையில் ஒரு சிங்கள் நண்பருக்கு அரசியல் தஞ்சம் பிரித்தானியா கொடுத்துள்ளது. அது போல் முன்னை நாள் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டள்ளது. உண்மையில் பிரித்தானியாவில் அவர்கள் தங்கள் வழக்கை நேரம் செலவு செய்து அதாரத்துட்ன கொடுத்தால் பலன் உண்டு. வெறுமனே வந்தோம் கேசை கொடுத்தோம் தும்படித்தோம் என்றால் நிலைமை மோசமே. இது பிரித்தானிய நிலைமை.

