07-22-2005, 03:25 PM
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று வந்த அன்பர் ஒருவர் அங்கு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய விடயமென இத்தகவலைத் தெரிவித்தார்.
அனேக இளைஞர்கள் வேலை எதுவும் செய்யாமல் ஆங்காங்கு சுற்றித் திரிகிறார்கள். ஆனால், இவர்கள் கையடக்கத் தொலைபேசியைக் காதில் வைத்துப் பேசிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இவர்களில் பலர் மோட்டார் சைக்கிளிலும் ஓடித் திரிகிறார்கள்.
இவர்களிடம் வேலை பற்றிக் கேட்டால், வெளிநாடு செல்லப் போகிறோம் என்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் மேசன், தச்சு வேலையாட்களை வேலைக்கு அழைத்தால் தங்களுக்கு உதவியாட்களைத் தேடிப் பிடிப்பது கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் இந்த வேலையைச் செய்யத் தயாரில்லை என்றார் அந்த அன்பர்.
வெளிநாட்டு பயணம் இவர்களுக்கு இலகுவாக வந்து கிடைப்பதால், அதன் அருமை பெருமை தெரியாமல் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்களோ!
Thanks:Thinakural

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............