07-22-2005, 02:26 PM
லண்டனில் தீவிரவாதி சுட்டுக் கொலை: போலீஸ் அதிரடி
ஜூலை 22, 2005
லண்டன்:
லண்டனில் தற்கொலைப் படை தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
தெற்கு லண்டனின் ஸ்டாக்வெல் பாதாள ரயில் நிலையத்தில் இச் சம்பவம் நடந்தது. நேற்று இரண்டாவது முறையாக லண்டனில் தொடர் குண்டுகள் வெடித்ததையடுத்து அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை 10 மணியளவில் பாதாள ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாகத் திரிந்த ஒருவனை போலீசார் சுட்டனர். இதில் அவன் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
இச் சம்பவத்தையடுத்து அந்த ரயில் நிலையத்திற்குச் சென்ற எல்லா ரயில்களும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், ஆசியரைப் போலக் காணப்பட்ட ஒருவர் ரயிலை நோக்கி ஓடினார். அவரை சாதாரண உடையில் இருந்த போலீசார் விரட்டிச் சென்றனர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு அவரது உடலில் ஐந்து முறை சுட்டனர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார் என்றார்.
ஆனால், போலீசார் இச் சம்பவம் குறித்து இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.
நேற்று ரயிலிலும் பஸ்சிலும் குண்டுகளை வெடிக்க வைக்க முயன்று அது முடியாமல் போனதால் தப்பிய தீவிரவாதிகள் 4 பேரையும் அடையாளம் கண்டுகொண்ட ஸ்காட்லாந்து யார்ட் போலீசார், அவர்களைப் பிடிக்க வலை விரித்தனர். அந்த வலையில் தான் இந்தத் தீவிரவாதி சிக்கியுள்ளான்.
இரண்டு வாரத்தில் நேற்று இரண்டாவது முறையாக லண்டனில் நேற்றும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதையடுத்து இங்கிலாந்து பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
கடந்த 7ம் தேதி ரயில்களிலும் பஸ்களிலும் நடந்த தாக்குதலைப் போலவே நேற்றும் 3 ரயில் நிலையங்களிலும் ஒரு பேருந்திலும் குண்டுகள் வெடித்தன.
இந்திய நேரப்படி நேற்று மாலையில் வாரன் ஸ்டிரீட் பாதாள ரயில் நிலையம், தெற்கு லண்டனின் ஓவல் ரயில் நிலையம், மேற்கு லண்டனின் ஷெப்பர்ட் புஷ் ஆகியவற்றிலும் ஹேக்னி ரேர்ட கொலம்பியா ரோட் சந்திப்பில் பஸ் எண் 26லும் குண்டுகள் வெடித்தன. நான்கும் ஒரே நேரத்தில் வெடித்தன.
ஆனால், இந்த குண்டுகள் சரியாக வெடிக்காததாலும், சில குண்டுகள் வெடிக்காமலேயே போனதாலும் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இருவர் மட்டுமே காயமடைந்தனர்.
ஆனால், இந்த குண்டு வெடிப்புகள் குறித்து செய்தி பரவியதும் லண்டன் செயலிழந்து போய் ஸ்தம்பித்துவிட்டது. கடைகள், அலுவலகங்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டனர். மேலும் இரு தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் மருத்துவமனையிலும் ரயில் நிலையத்திலும் புகுந்துள்ளதாக புரளி பரவியதால் லண்டன் நகரம் திமிலோகப்பட்டது.
இந் நிலையில் இன்றைய போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதற்கிடையே நேற்றைய லண்டன் தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அபு அப்ஸ் அல் மஸ்ரி பிரிகேட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 7ம் தேதி நடந்த தாக்குதலையும் இந்த அமைப்பு தான் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இராக்கிலிருந்து ஐரோப்பியப் படைகள் வெளியேறும் வரை நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் எங்களது அடுத்த தாக்குதல் பெரும் நரகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே கிழக்கு லண்டனில் ஒரு மசூதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மசூதியை சூழ்ந்தனர். ஆனால், சோதனையில் குண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை.