07-21-2005, 10:25 PM
முகத்தாரிண்ட மனிசி ஒரு நாள் இரவு கண் முளிச்சு பார்த்த போது கட்டிலில் முகத்தார் பக்கத்தில் இல்லை. எங்கே இவர் எனத் தேடிக்கொண்டு வந்த போது ஹாலில்(Hall) அரை இருட்டில் லைட் ஏதும் போடாமல் கதிரையில இருந்து நல்ல ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
"என்னங்கோ யோசிச்சு கொண்டு இருக்கீறீங்கள் இன்னேரம்?"
"உனக்கு ஞாபகம் இருக்கே 15 வருசத்துக்கு முன்னால நாங்கள் ரெண்டு பேரும் காதலிச்சிகிட்டு இருந்தம். அப்ப உனக்கு வயசு 16 தான்"
"நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்கென்ன இப்ப?"
"இதே தேதில தான் நாங்கள் ரெண்டு பேரும் மதகுக்கு பின்னால முத்தம் கொடுத்துகொண்டு இருக்கேக்க உன்ர அப்பா பாத்துட்டார். ஞாபகம் இருக்கா?"
"அட அந்த தேதிய கூட ஞாபகம் வச்சிருக்கீங்களே?" (இப்போது முகத்தாற்ற மனிசி உண்மையில் நெகிழ்ந்து போய் விட்டார்).
"அதுக்குப்பிறகு உன்ர போலீஸ்கார அப்பா உன்ர சண்டியன் அண்ணன் சின்னப்பு எல்லாரும் சேந்து நான் உடனே உன்னைய கட்டோணும் இல்ல எண்டா மைனர் பிள்ள மனசை கெடுத்துட்டேன்னு கேஸ் போட்டு 15 வருசம் ஜெயில்ல போட்டுடுவம் வெருட்டினது..... ஞாபகம் இருக்கா?"
"ஓமோம். எப்படி அதையெல்லாம் மறக்ககேலும்?" என்றார் மென்மையாக முகத்தாற்ற மனுசி .
"அப்படி நடந்து நான் ஜெயிலுக்கு போயிருந்தா இண்டையொட அந்த 15 வருச தண்டனை முடிஞ்சு நான் சுதந்திரமா வெளில வந்திருப்பேன்" என்றார் முகத்தார் சோகமாக...

::