07-21-2005, 11:32 AM
முகத்தாரும் அவர் மனைவியும் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனார்கள். இடைவேளையில் எழுந்து வெளியே வந்து டீ குடித்து விட்டு வரும் முன்னே விளக்கெல்லாம் அணைத்து படம் போட்டு விட உள்ளே வந்த முகத்தார் அந்த வரிசையின் கடைசியில் உட்கார்ந்திருந்தவரிடம் குனிந்து 'நான் வெளியே போகும் போது உங்கட கால மிதிச்சுட்டனா?' என்று கேட்டார். அவனும் கோபமாய் 'ஓமப்பா ஓம்' என்டான். 'அப்ப சரி இது தான் நாங்கள் உக்காந்திருந்த வரிசை. சரிதான்' என்றார் முகத்தார் தன் மனைவியிடம்.
::


