06-21-2003, 09:32 AM
இரவு தின்னப்போகும் உனக்கான இரங்கல் பாடல்
குளிர் கால இரவில்
நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்
இரவு உன்னை வருடிக்கொள்கிறது
என நினைத்து
ஒரு சூரியனை
எதிர்பார்த்து காத்திருக்காத நீ
தூங்கிக் கொண்டிருக்கிறாய்
இருளோடு
எப்போதிருந்து வசிக்கத்தொடங்கினாய்?
அதன் புதிர் ஆழத்துள் புதைந்திருக்கும்
வசீகர வர்ணங்களின்
மூச்சொலி
ஒரு ஓவியமாகுமென நீ நம்புகிறாயா?
நீ சொல்லக்கூடும்
இரவு அமைதியானதென
நான் சொல்கிறேன்
இரவு
சப்தங்கள் எல்லாவற்றையும் தின றுவிட்டு
காத்திருக்கிறது உனது குரல்வளை அருகில்
எனக்குத் தெரியும்
இரவின் கரிய நிறத்துள்
எந்தப் புள்ளியுமற்று
முடிந்துபோகப் போகிறது உனது வாழ்வு
நான் கவலை கொள்வதெல்லாம்:
இரவிடம் கொடிய அலகுகள்
உள்ளன என்பதை
உனக்கு நம்பவைப்பது பற்றியே.
சித்தாநதன்;
குளிர் கால இரவில்
நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்
இரவு உன்னை வருடிக்கொள்கிறது
என நினைத்து
ஒரு சூரியனை
எதிர்பார்த்து காத்திருக்காத நீ
தூங்கிக் கொண்டிருக்கிறாய்
இருளோடு
எப்போதிருந்து வசிக்கத்தொடங்கினாய்?
அதன் புதிர் ஆழத்துள் புதைந்திருக்கும்
வசீகர வர்ணங்களின்
மூச்சொலி
ஒரு ஓவியமாகுமென நீ நம்புகிறாயா?
நீ சொல்லக்கூடும்
இரவு அமைதியானதென
நான் சொல்கிறேன்
இரவு
சப்தங்கள் எல்லாவற்றையும் தின றுவிட்டு
காத்திருக்கிறது உனது குரல்வளை அருகில்
எனக்குத் தெரியும்
இரவின் கரிய நிறத்துள்
எந்தப் புள்ளியுமற்று
முடிந்துபோகப் போகிறது உனது வாழ்வு
நான் கவலை கொள்வதெல்லாம்:
இரவிடம் கொடிய அலகுகள்
உள்ளன என்பதை
உனக்கு நம்பவைப்பது பற்றியே.
சித்தாநதன்;

