07-20-2005, 10:00 PM
Thala Wrote:ஒரு ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத் துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா. இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.
படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


