06-21-2003, 09:31 AM
தேவதைக் காலத்தின் மரணம்
தேவதைக் காலத்தின் மரணம்
யாருடைய வேண்டுதல்களுமற்று
யன்னல்களை உதைத்துச் சென்றது
எல்லையற்ற காற்று.
நிலா ஒளியில் பாதி மினுமினுப்புடனிருந்த
அருவிகளின் பாடல்களும்
எவரும் எடுத்தெறியாமலேயே
காணாமற் போயின.
நீ பேசவில்லை:
மௌனம் இருளாய் சொற்களை
மூடியிருந்தது.
உனது உதடுகளில்
ஆயிரம் இதழ்களும் வற்றிய
புன்னகையிருந்தது.
(நான் நினைக்கிறேன் எனது உதடுகளிலும் இதே புன்னகையையே....நீ கண்டிருக்கவும் கூடும்)
வார்த்தைகளால் எப்போதுமே நிறைந்திருக்கும்
இந்த அறையை ஒரு மோகினி
சபித்துப் போனாள் என்பதை
நான் நம்பவில்லை.
சாத்தான் தனது சாவறையும் கைகளால்
எம்மை தடவிச் சென்றிருக்கலாமென
எவரேனும் சொல்லிடவும் கூடும்.
எதுவுமேயில்லை
தேவதைகள் செத்துப்போயின
எங்கள் மனங்களுக்குள்.
நானும் நீயும் செய்யவேண்டியதெல்லாம்
எங்கள் மனங்களுக்குள் செத்துப்போன
தேவதைகளை எழுப்ப வேண்டும்.
வறண்ட மௌனத்தின் ஆழத்தினுள்
கிழிந்து கிடக்கும் சொற்களில்
ஒன்றையாவது
அர்த்த ஒலியுடன் பேசவேண்டும்.
நிச்சயமாக
நீயும் நானுமாக.
தேவதைக் காலத்தின் மரணம்
யாருடைய வேண்டுதல்களுமற்று
யன்னல்களை உதைத்துச் சென்றது
எல்லையற்ற காற்று.
நிலா ஒளியில் பாதி மினுமினுப்புடனிருந்த
அருவிகளின் பாடல்களும்
எவரும் எடுத்தெறியாமலேயே
காணாமற் போயின.
நீ பேசவில்லை:
மௌனம் இருளாய் சொற்களை
மூடியிருந்தது.
உனது உதடுகளில்
ஆயிரம் இதழ்களும் வற்றிய
புன்னகையிருந்தது.
(நான் நினைக்கிறேன் எனது உதடுகளிலும் இதே புன்னகையையே....நீ கண்டிருக்கவும் கூடும்)
வார்த்தைகளால் எப்போதுமே நிறைந்திருக்கும்
இந்த அறையை ஒரு மோகினி
சபித்துப் போனாள் என்பதை
நான் நம்பவில்லை.
சாத்தான் தனது சாவறையும் கைகளால்
எம்மை தடவிச் சென்றிருக்கலாமென
எவரேனும் சொல்லிடவும் கூடும்.
எதுவுமேயில்லை
தேவதைகள் செத்துப்போயின
எங்கள் மனங்களுக்குள்.
நானும் நீயும் செய்யவேண்டியதெல்லாம்
எங்கள் மனங்களுக்குள் செத்துப்போன
தேவதைகளை எழுப்ப வேண்டும்.
வறண்ட மௌனத்தின் ஆழத்தினுள்
கிழிந்து கிடக்கும் சொற்களில்
ஒன்றையாவது
அர்த்த ஒலியுடன் பேசவேண்டும்.
நிச்சயமாக
நீயும் நானுமாக.

