Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2வது லெப்டினன்ட் மாலதி.
#1
2வது லெப்டினன்ட் மாலதி.

நேற்றுவரை நிமிரவில்லை நாங்கள்
நெஞ்சு மட்டும் ஊமையாக அழுதபடி
எம் நாட்கள்.....

பட்டுடுத்திப் பாவாடை தாவணிக்குள்
கட்டுண்டு கிடந்து
கனவுகளைத் தொலைத்தவர்கள்.....

கண்ணாடி முன்னின்று கண்ணுக்கு மைபூசி
இதழுக்குச் சாயமிட்டு
இன்னுமின்னும் நிறைய.....
அலங்காரச் சகதியிலே
அமிழ்ந்து போனவர்கள்....!

இதுவா வாழ்வுமது ?
இல்லைத் தோழியரே
எழுவோம் என்றவள் எழுந்தாள்
நிமிர்வோம் என்றவள் நிமிர்ந்தாள்.

நெஞ்சது சிலிர்த்திடப் புலியாய் எழுந்தவள்
புயலால் நிமிர்ந்தவள் எங்கள் மாலதி.
நெருப்பில் நீந்தியே அடுப்பில் வெந்திடப்
பிறந்தோம் என்றவர் புயங்கள் நிமிர்ந்திட
நெருப்பை விதைத்தவள்.

வெந்தினிச் செத்திடோம் - வேங்கைகள்
நாமென விழித்திட வைத்தவள்.
பூவெனப் புகழ்ந்தவர் பாவது கருகிடப்
பாய்ந்தவள் புலியென.....
பகைச்சேனைகள் தகர்ந்திட
செந்தணல் அவள் சீறினாள்.

புலித்தானையை தலைவனின் சேனையை
நசுக்குவோம் என்றவர்
நசுங்கிடக் கருவியைக் கையிலே சுமந்து - எம்
சுந்தர பூமியின் சுதந்திரம்
காத்திடச் செந்தணல் சுமந்தவள்.

பெண்மையைத் தின்றிட்டுப் பிணங்களை நிரப்பியே
ஊர்களின் வாசலில் ஒப்பாரிப்பாடலை
பூபாளம் ஆக்கிய பாரதப்பேய்களை
புதைகுளியனுப்பிய புயலவள்.

மாலதி....!

முதற்களப் பெண்புலி
மூச்சையெம் விடியலின்
வேளைக்காய் விழுதாக்கிச் சென்றவள்.

விழுதவள் வித்தாய் வீழ்ந்த நாளிது
வணங்குவோம் மாலதி
வாழ்ந்த வாழ்வினை வையமெலாம்
போற்றிட வாழ்த்துவோம் அவள் நாமம்.
Reply


Messages In This Thread
2வது லெப்டினன்ட் மாலதி - by shanthy - 10-09-2003, 07:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)