07-20-2005, 01:02 PM
டிஸ்கவரி'யில் என்ன கோளாறு? விடை தெரியாமல் தவிக்கிறது நாசா
<img src='http://www.dinamani.com/Images/July05/19dnasa.jpg' border='0' alt='user posted image'>
<b><i>அமெரிக்காவின் கேப் கனவராலில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் (இடமிருந்து) டிஸ்கவரி விண்வெளி ஓட திட்ட மேலாளர் பில் பார்சன்ஸ், துணை இயக்குநர் வேய்ன் ஹேல்.</i></b>
ஹூஸ்டன், ஜூலை 20: டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் என்னவிதமான கோளாறுகள் ஏற்பட்டதால், அதை ஏவும் பணி தோல்வியடைந்தது என்பதற்கான விடையை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் இன்னமும் முழுமையாக கண்டறிய முடியவில்லை.
கடந்த ஜூலை 13-ல் எரிபொருள் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக டிஸ்கவரியை ஏவும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறுகளைக் கண்டறிந்து, தீர்வு காணும் பணியில் நாசா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஜூலை 26-ம் தேதி வரை டிஸ்கவரியை ஏவும் வாய்ப்பு இல்லை எனவும் நாசா கூறியுள்ளது. இம்மாத இறுதிக்குள் டிஸ்கவரியை ஏவுவது கடினமான விஷயம்தான் என்றாலும் கூட, எப்பாடுபட்டாவது டிஸ்கவரியை விரைவில் விண்வெளியில் ஏவுவதற்காக நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
""பிரச்சினைகளைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது குழுவில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானிகள் மிகவும் திறமைசாலிகள். பிரச்சினையை எப்படியும் சரி செய்துவிடுவோம் என நம்புகிறோம். மேலும் ஜூலை 31-க்குள் டிஸ்கவரி ஏவப்பட்டுவிடும் எனவும் நம்புகிறோம்'' என டிஸ்கவரி திட்ட மேலாளர் பில் பார்சன்ஸ் தெரிவித்தார். எரிபொருள் சென்சாரைத் தவிர வேறு பிரச்சினைகளும் எழுந்துள்ளனவா என ஒரு விஞ்ஞானியிடம் கேட்டதற்கு, அவ்வப்போது சிறிய பிரச்சினைகளும் உருவாகின்றன எனப் பதில் அளித்தார்.
திணமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>