06-21-2003, 09:30 AM
கேணல் சங்கர்
அனாமதேயமாய் எம்
ஆத்மாக்களில். இரும்புக்
கோட்டையின் இதயக்கூடழிந்து
தோழனேலு}!
அஞ்சிப்பகையரசு
ஆடிப்போனது - உன்
அக்கினிப் பிளம்பதிலே
வெடியாகி - நீ அடையாளமின்றி
வித்தாகிப் போனாய் - நாம்
விழியேந்தி உன் வரவை
விரும்பி நின்றோம்
'நீ வரவில்லை'
நாளையைத்தேடி நாங்கள் நாடுநாடாய் ஓடுகையில்
நீயோ இன்றைத்தேடி
அவலத்தை எம்
ஆயுளாக்கிய பேயழித்து
அமைதியாய்.
என்ன அதிசயம் எப்படி இதுவெல்லாம்.
உயிர் விறைக்க
உன் வீரம்?
எப்படி இதுவெல்லாம்.
தினம் உன்னுள் குமுறிய எரிமலையை - உன்தோழர்கள் சொன்னபோது
நீ தீயோடு உருகித் தற்கொடையின்
இமயத்தில் தலைநிமிர்ந்து
தோழனே! தாயகக்காற்றோடு - நீ
தணலாகிப்போனாய்
கல்லறை - நீ
கேட்கவில்லை
கண்ணீரஞ்சலியும்
கேட்கவில்லை
வரலாற்றில் ஓர் இடம்
இல்லை
உனக்காகவென்று - நீ எதையுமே கேட்கவில்லை
உன் இதயத்துடிப் பெங்கும்
விடியலின் ராகமே
தந்திமீட்டிக் கொண்டிருந்தது
அதுதான் - நீ
எம் ஆத்மாக்களில்
அமைதியாய்
உச்சரிக்கப்படுகின்றாய்
வெளிவரும் ஒரு நாள்விழுதே உன் நாமம்
அதுவரை நாம்
அமைதியாயிருப்போம்
அன்புத்தோழனே!
அதுவரை நாம்
அமைதியாய் இருப்போம்.
சாந்தி ரமேஸ் வவுனியன்
அனாமதேயமாய் எம்
ஆத்மாக்களில். இரும்புக்
கோட்டையின் இதயக்கூடழிந்து
தோழனேலு}!
அஞ்சிப்பகையரசு
ஆடிப்போனது - உன்
அக்கினிப் பிளம்பதிலே
வெடியாகி - நீ அடையாளமின்றி
வித்தாகிப் போனாய் - நாம்
விழியேந்தி உன் வரவை
விரும்பி நின்றோம்
'நீ வரவில்லை'
நாளையைத்தேடி நாங்கள் நாடுநாடாய் ஓடுகையில்
நீயோ இன்றைத்தேடி
அவலத்தை எம்
ஆயுளாக்கிய பேயழித்து
அமைதியாய்.
என்ன அதிசயம் எப்படி இதுவெல்லாம்.
உயிர் விறைக்க
உன் வீரம்?
எப்படி இதுவெல்லாம்.
தினம் உன்னுள் குமுறிய எரிமலையை - உன்தோழர்கள் சொன்னபோது
நீ தீயோடு உருகித் தற்கொடையின்
இமயத்தில் தலைநிமிர்ந்து
தோழனே! தாயகக்காற்றோடு - நீ
தணலாகிப்போனாய்
கல்லறை - நீ
கேட்கவில்லை
கண்ணீரஞ்சலியும்
கேட்கவில்லை
வரலாற்றில் ஓர் இடம்
இல்லை
உனக்காகவென்று - நீ எதையுமே கேட்கவில்லை
உன் இதயத்துடிப் பெங்கும்
விடியலின் ராகமே
தந்திமீட்டிக் கொண்டிருந்தது
அதுதான் - நீ
எம் ஆத்மாக்களில்
அமைதியாய்
உச்சரிக்கப்படுகின்றாய்
வெளிவரும் ஒரு நாள்விழுதே உன் நாமம்
அதுவரை நாம்
அமைதியாயிருப்போம்
அன்புத்தோழனே!
அதுவரை நாம்
அமைதியாய் இருப்போம்.
சாந்தி ரமேஸ் வவுனியன்

