06-21-2003, 09:30 AM
எழுக
இந்தச் சிறுமுல்லைக் காடதிர.
ஆவி கலங்குமெமை ஆதரிக்க நீ வருக.
தேவி எழுக
இந்தச் சிறுமுல்லைக் காடதிர.
கூவும் குயிற்பாட்டெம் குடிமனையிற் கேட்டிடணும்.
தூவும் மழைச்சாரல்
சுடு நிலத்தில் வீழ்ந்திடணும்.
தவித்த வாயடங்கத் தண்ணீர் பெருகிடணும்.
அவித்த கிழங்குண்டு
அந்தரித்த உயிர்களுக்கு
விதித்த தீர்ப்பதனை விலக்கிச் சுகம் தருக.
நதியில் இறங்கிடணும் நம் கால்கள்
இற்றை வரை
கொதித்த உடலமெலாம் குளிரும் நிலை வரணும்
வாசலெங்கும் கோர வல்லூறின் எச்சங்கள்.
வீசும் காற்றினிலும் வெடிமருந்தின் உச்சமணம்.
சாவின் மணம் போதும்
சாக்காட்டின் புூமத்தம்
புூவின் மணம் போதும்
புது வசந்தம் வீசட்டும்.
இரந்திரந்து எல்லா இரவற் திண்ணையிலும்
உறங்கியதும்
பட்ட உத்தரிப்பும் போதுமடி.
கரம் தொழுதோம் எங்கள் கண்ணீருக்கென்ன பதில்?
வரம் தருவாய் அழுத வாசலினி விளங்கட்டும்.
விண்ணைக் கிழித்துந்தன் விழிதிறந்து
எமைப் பார்த்துப்
புன்னகையை நல்காய் பெருமாட்டி.
கையிலுள்ள
உடுக்கினொலியிந்த உலகேழும் ஆர்ப்பரிக்க
மிடுக்கோடுனது சிறு மெட்டியொலி கேட்டிடணும்.
கண்டி நெடுஞ்சாலைக் கரையெங்கும்
புூமலர்ந்து
வண்டூதும் பாடல் வரணும்.
ஊர்புகுமெம்
தேர்களிலே உந்தன் திருமுகமே இலங்கிடணும்.
நீர்தெளித்து வைத்த நிறைகுடங்கள் யாவினிலும்
நெற்றித் திலகம் நிலைத்திடணும்.
வன்னியிலே
பெற்ற வரங்களுடன் போகுமெம் பிள்ளைகளின்
வெள்ளைப் புரவிகளால் வீதியெலாம் ஜொலிப்புறுக.
கள்ளி, சிறுநெருஞ்சிக் காட்டிடையே தீயெழுக.
மீண்டும் துளிர்த்தெங்கள்
முல்லை வனம் புூச்சொரிக.
தோண்டும் குழியிருந்து
சுனை நீர் பெருகிடுக.
இடையில் கடல் கடந்து இடம் பெயர்ந்தோம்
இன்றோ பார்
தடைகள் உடைத்தெங்கள் தார் வீதி மீளுகிறோம்.
ஆறு வருடமதாய்லு}
அடை காத்து
அடை காத்து
வீறுடைய குஞ்சுகளை வெளியே வரச் செய்தோம்.
சூரியனின் சூடில் சூல் கொண்ட மலையினிக்
காரிருட்டு மேகம் கவியாது.
விடுதலையின்
வேரினிலே எந்த விச எறும்பும் கடியாது.
மீன்பாடும் வாவி மிளிரும்
இரணை மடு
வான் பாயும், கோண வரை மீது முகிலிறங்கும்.
பாலாவி நீர் கொண்டு பாடும்.
கீரிமலை
ஆளாகி மீண்டும் அழகாய் புதிதுடுக்கும்.
வன்னிமண் தன்னை வணங்குகிறோம்.
இத்தனை நாள்
கண்ணின் இமையாகிக் காத்தாள்
அவள் முலையில்
பாலருந்திப் பெற்ற பலத்தால் நிமிர்ந்துள்ளோம்.
தேவி எழுக
இந்தச் சிறு முல்லைக் காடதிர.
ஆவி கலங்குமெமை ஆதரிக்க நீ வருக.
தேவி எழுக
இந்தச் சிறு முல்லைக் காடதிர.
புதுவை இரத்தினதுரை
இந்தச் சிறுமுல்லைக் காடதிர.
ஆவி கலங்குமெமை ஆதரிக்க நீ வருக.
தேவி எழுக
இந்தச் சிறுமுல்லைக் காடதிர.
கூவும் குயிற்பாட்டெம் குடிமனையிற் கேட்டிடணும்.
தூவும் மழைச்சாரல்
சுடு நிலத்தில் வீழ்ந்திடணும்.
தவித்த வாயடங்கத் தண்ணீர் பெருகிடணும்.
அவித்த கிழங்குண்டு
அந்தரித்த உயிர்களுக்கு
விதித்த தீர்ப்பதனை விலக்கிச் சுகம் தருக.
நதியில் இறங்கிடணும் நம் கால்கள்
இற்றை வரை
கொதித்த உடலமெலாம் குளிரும் நிலை வரணும்
வாசலெங்கும் கோர வல்லூறின் எச்சங்கள்.
வீசும் காற்றினிலும் வெடிமருந்தின் உச்சமணம்.
சாவின் மணம் போதும்
சாக்காட்டின் புூமத்தம்
புூவின் மணம் போதும்
புது வசந்தம் வீசட்டும்.
இரந்திரந்து எல்லா இரவற் திண்ணையிலும்
உறங்கியதும்
பட்ட உத்தரிப்பும் போதுமடி.
கரம் தொழுதோம் எங்கள் கண்ணீருக்கென்ன பதில்?
வரம் தருவாய் அழுத வாசலினி விளங்கட்டும்.
விண்ணைக் கிழித்துந்தன் விழிதிறந்து
எமைப் பார்த்துப்
புன்னகையை நல்காய் பெருமாட்டி.
கையிலுள்ள
உடுக்கினொலியிந்த உலகேழும் ஆர்ப்பரிக்க
மிடுக்கோடுனது சிறு மெட்டியொலி கேட்டிடணும்.
கண்டி நெடுஞ்சாலைக் கரையெங்கும்
புூமலர்ந்து
வண்டூதும் பாடல் வரணும்.
ஊர்புகுமெம்
தேர்களிலே உந்தன் திருமுகமே இலங்கிடணும்.
நீர்தெளித்து வைத்த நிறைகுடங்கள் யாவினிலும்
நெற்றித் திலகம் நிலைத்திடணும்.
வன்னியிலே
பெற்ற வரங்களுடன் போகுமெம் பிள்ளைகளின்
வெள்ளைப் புரவிகளால் வீதியெலாம் ஜொலிப்புறுக.
கள்ளி, சிறுநெருஞ்சிக் காட்டிடையே தீயெழுக.
மீண்டும் துளிர்த்தெங்கள்
முல்லை வனம் புூச்சொரிக.
தோண்டும் குழியிருந்து
சுனை நீர் பெருகிடுக.
இடையில் கடல் கடந்து இடம் பெயர்ந்தோம்
இன்றோ பார்
தடைகள் உடைத்தெங்கள் தார் வீதி மீளுகிறோம்.
ஆறு வருடமதாய்லு}
அடை காத்து
அடை காத்து
வீறுடைய குஞ்சுகளை வெளியே வரச் செய்தோம்.
சூரியனின் சூடில் சூல் கொண்ட மலையினிக்
காரிருட்டு மேகம் கவியாது.
விடுதலையின்
வேரினிலே எந்த விச எறும்பும் கடியாது.
மீன்பாடும் வாவி மிளிரும்
இரணை மடு
வான் பாயும், கோண வரை மீது முகிலிறங்கும்.
பாலாவி நீர் கொண்டு பாடும்.
கீரிமலை
ஆளாகி மீண்டும் அழகாய் புதிதுடுக்கும்.
வன்னிமண் தன்னை வணங்குகிறோம்.
இத்தனை நாள்
கண்ணின் இமையாகிக் காத்தாள்
அவள் முலையில்
பாலருந்திப் பெற்ற பலத்தால் நிமிர்ந்துள்ளோம்.
தேவி எழுக
இந்தச் சிறு முல்லைக் காடதிர.
ஆவி கலங்குமெமை ஆதரிக்க நீ வருக.
தேவி எழுக
இந்தச் சிறு முல்லைக் காடதிர.
புதுவை இரத்தினதுரை

