10-09-2003, 12:30 PM
அப்டிப் போய் வந்த இரண்டோருவரின் முகவரி இருந்தால் தாருங்களேன். எந்தவழியால் போய் வந்தார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். அல்லது அவர்கள் லண்டன் மாநகரிலிருந்து வந்திருப்பதனால் அப்படி ஏதாவது ஏடகூடமாக நடந்தார்களோ தெரியாது. எனேனில் தமிழீழத்திலும் விசேட பொலிஸ் அணியை உருவாக்க வேண்டும் என்ற நிபை;பிலோ தெரியாது நான்; ஏழைகளின் வாகனத்திலே தான் நிம்மதியாக தமிழீழத்திற்குப் பயனம் செய்து விட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்தேன். கொடுக்கும் மரியாதைகளை அவர்கள் எல்லோருக்கும் சமனாகத் தான் வழங்கி அன்புடன் உபசரித்தார்கள். முகமாலையிலும், விளக்கு வைத்தான் குளத்திலும் தான் தொல்லைகள் இருந்தது. அதுவும் முன் மாதிரி இல்லை என்பதை ஒத்துக் கொள்கின்றேன். ஒரு சிலர் தாம் ஐரோப்பி மக்கள் என்ற எண்ணத்தில் ஏதாவது எதிர்பார்த்திருப்பார்கள் அது கிடைக்காததால் கதையளந்திருப்பார்கள். கணக்கிலெடுக்காதீர்கள். தமிழீழத்தில் எல்லோரும் சமம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

