06-21-2003, 09:30 AM
அவர்களுக்காக...... வருந்துகிறோம்
குருவிகளே
நீங்கள் சிறகசைக்கப் போன
வானமே வலையாக
மாறியபோது
உங்கள் வாழ்க்கை இருண்டு கொண்டது.
இருந்த வெளிச்சமும்
வெளியேறிக் கொள்கிறது.
குற்றமில்லா நீங்கள்
குற்றவாளிகளால் தாக்கப்படுகிறீர்கள்.
விசாரணை
தூரத்தில் தெரியும்
துரும்பாகி விடுகிறது.
விடுதலைத் திகதி
கலண்டா}ல் இருந்து
கழன்று விழுகிறது.
இளமைப் பறவை
இரும்புக் கம்பிகளுக்குள்
சிறகு உதிர்க்கிறது.
கூடப்பிறந்த குற்றத்திற்காக
கனவுகளை உறவுகள்
சுவீகாரித்துக் கொள்கின்றன.
உண்பதே உடம்பில்
ஒட்டாத போதும்
விடுதலைக்காக அதனையும்
விடுவித்துக் கொள்கிறீர்கள்.
ஆனால்,
விடுதலை வானம்தான்
புலப்படாமல் போய்விடுகிறது.
த.டே.கிஸ்காட
குருவிகளே
நீங்கள் சிறகசைக்கப் போன
வானமே வலையாக
மாறியபோது
உங்கள் வாழ்க்கை இருண்டு கொண்டது.
இருந்த வெளிச்சமும்
வெளியேறிக் கொள்கிறது.
குற்றமில்லா நீங்கள்
குற்றவாளிகளால் தாக்கப்படுகிறீர்கள்.
விசாரணை
தூரத்தில் தெரியும்
துரும்பாகி விடுகிறது.
விடுதலைத் திகதி
கலண்டா}ல் இருந்து
கழன்று விழுகிறது.
இளமைப் பறவை
இரும்புக் கம்பிகளுக்குள்
சிறகு உதிர்க்கிறது.
கூடப்பிறந்த குற்றத்திற்காக
கனவுகளை உறவுகள்
சுவீகாரித்துக் கொள்கின்றன.
உண்பதே உடம்பில்
ஒட்டாத போதும்
விடுதலைக்காக அதனையும்
விடுவித்துக் கொள்கிறீர்கள்.
ஆனால்,
விடுதலை வானம்தான்
புலப்படாமல் போய்விடுகிறது.
த.டே.கிஸ்காட

