07-18-2005, 11:15 AM
<b>கங்குலியை மட்டும் தண்டிப்பது முறையற்ற செயல்:</b> <i>தர்மதாசா</i>
பந்துவீச அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் காப்டன் செüரவ் கங்குலியை மட்டும் தண்டனைக்குள்ளாக்குவது முறையற்ற செயல் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கை, மே.இ.தீவுகள், இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருதின கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி கொழும்பில் தொடங்குகிறது.
இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால குழு தலைவர் ஜயந்தா தர்மதாசா கோல்கத்தாவில் சனிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்தார்.
மேலும் கூறியது:
அன்றைய ஆட்டத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக காப்டன் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார். ஆனால் அதற்காக காப்டனுக்கு மட்டுமே தண்டனை கொடுப்பது சரியல்ல என நான் நினைக்கிறேன்.
ஆடுகளத்தில் வீரர்களை வழிநடத்துவது என்பது எளிதான பணி அல்ல. சக வீரர்களின் ஒருங்கிணைப்பு காப்டனுக்கு அவசியம். 1980-களில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய கிம் கியூûஸ அதற்கு உதாரணமாகக் கூறலாம். டென்னிஸ் லில்லி மாதிரியான வீரர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து விளையாடுவதில் சிறப்பு பெற்றிருந்தார்.
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கு கங்குலி வரவேண்டும். போட்டிக்காக அவர் வருகையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
DINAMANI.COM