Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது
#4
பொதுக்கட்டமைப்புக்கு தடை குறித்து

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இத் தீர்ப்பு துரதிர்ஸ்டவசமானது. ஏனெனில் கடந்த காலங்கள் போலவே தமிழ்மக்களுக்கு எந்தவித நன்மைகளும் சென்றுவிடக்கூடாது- தீர்வு முயற்சிகள் எதுவும் வெற்றி பெறக்கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதத் தலைமைகள் வழிமுறைகளை கையாண்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக மதப் பீடங்களைக்கொண்டோ அப்படி இல்லாத நிலையில் நீதித் துறையினைக் கொண்டோ பேரினவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். முன்னெடுக்கப்பட்ட பல தீர்வு முயற்சிகளை சீர்குலைத்துள்ளார்கள். இதுதான் பொதுக்கட்டமைப்பிற்கும் ஏற்பட்டுள்ளது.

பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு மனிதாபிமான நெருக்கடிக்கு உதவும் ஒரு சாதாரண கட்டமைப்பு. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவதற்கான இந்த சாதாரண கட்டமைப்பையே ஆட்டம் காணச்செய்துள்ளார்கள் பேரினவாதிகள்.

சிறிலங்கா நீதித்துறையே இவ்வாறான முடிவை எடுத்ததில் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

சிறிலங்கா நீதித்துறை தமிழ்மக்களுக்கு நீதி வழங்குவதில் கடந்த காலங்களில் விரோதமாகவே செயற்பட்டுள்ளது.

சிறிலங்கா சிறையிலேயே தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் படுகொலை செய்தவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்ட போதிலும் படுகொலை செய்தவர்களை பிழை செய்யவில்லையெனக் கூறி அண்மைக்காலத்தில் கூட விடுதலை செய்துள்ளனர்.

வரலாற்று ரீதியாகவும் பார்ப்போமானால் தமிழ்மக்களுக்கு எதிரான சட்டங்கள் கூட சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டு தமிழ்மக்கள் பெரும் அநீதிக்கு உட்படுத்தப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் தான் பொதுக்கட்டமைப்பு தொடர்பான தீர்ப்பையும் கருத வேண்டியுள்ளது.

தீவிராமாகும் நிழல் யுத்தம்- இனியும் பொறுப்பதற்கில்லை

தென்தமிழீழத்தில் அண்மையில் திருகோணமலையில் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிறிலங்கா படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

போர்ச் சூழலை உருவாக்கும் நோக்குடனும் தமிழ்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களது செயற்பாடுகள் அமைந்து வருகின்றன. ஏதாவது ஒருவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை போருக்குள் தள்ளிவிடும் ஒரு போக்கைத்தான் சிறிலங்கா படைத்தரப்பு செய்து வருகிறது. இதிலும் குறிப்பாக தென்தமிழீழத்தில்தான் இவ்வாறான நிலைமைகள் உள்ளன.

போராளிகளுக்கான அச்சுறுத்தல் கூடுதலாக உள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டின் படி நிராயுதபாணிகளாகத்தான் போராளிகள் அரசியல் பணியை செய்யவேண்டியுள்ளது. இந்நிலையில் போராளிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசபடைகள் நிழல் யுத்தம் ஒன்றினை தீவிரமாக்கியுள்ளது என்பதைத்தான் கூறமுடியும்.

போர்நிறுத்த உடன்பாடு, அமைதி முயற்சிகள் ஆகியவற்றை குழப்பிக்கொண்டு முறித்துக்கொண்டு செல்ல எமது தலைப்பீடம் விரும்பாது.

தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பொறுத்தவரையில் அமைதி வழியில் தீர்வுகளுககான முயற்சிகளை முயன்று பார்த்திருக்கின்றோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். மிகப் பொறுமையையும் விட்டுக்கொடுப்பையும் எமது தலைவர் செய்து இருக்கிறார். சமாதானச் சூழலில்தான் பல போராளிகளையும் தளபதிகளையும், மக்களையும் இழந்து இருக்கிறோம்.

நீண்டதொரு பொறுமையுடன் காத்திருக்கிறோம். ஆனால் தற்போது நிலைமைகள் மோசமாக்கப்பட்டுள்ளது. போராளிகளது பயணங்கள் முடக்கப்பட்டு நிழல் யுத்தம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இராணுவகட்டுப்பாட்டு பகுதிகளில் இராணுவமும் ஆயுதக்குழுக்களும் போராளிகளை படுகொலை செய்தவண்ணமுள்ளனர். இந்நிலைமைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார் அவர்.

தமிழ் மக்களின் நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
http://www.eelampage.com/?cn=18630
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 07-17-2005, 09:22 AM
[No subject] - by narathar - 07-17-2005, 02:48 PM
[No subject] - by narathar - 07-17-2005, 02:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)