Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது
#3
http://www.eelampage.com/?cn=18626
சமாதானப் பேச்சுக்களின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது: இரா. சம்பந்தன்
[ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2005, 17:11 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தென்னிலங்கை அரசியல் நிலைமைகளால் சமாதான பேச்சுக்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்புக்குப் பிறகு ஊடகவியலாளர்களுக்கு இரா. சம்பந்தன் அளித்த நேர்காணல்:

தென்னிலங்கையின் இன்றைய அரசியல் நிலமை தமிழ்த் தேசிய இனத்திற்கு பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றது.

கடந்த மூன்றரை வருடங்களாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் பிறகு அரசியல் ரீதியாக எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இடைக்கால நிர்வாகம், பொதுக்கட்டமைப்பு யாவும் முடக்கப்பட்டு ஒருவிதமான முன்னேற்றமும் உருவாகவில்லை.

இப்படியான நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலமாக தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படலாம் என்பதில் நாங்கள் எல்லோரும் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அவ்விதமான ஒரு நிலையை நாங்கள் விரும்பவில்லைதான். ஆனால் அந்த நிலைமைக்கு நாங்கள் எல்லோரும் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இது தொடர்பாக மக்கள் சகல விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நாங்கள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றோம்.

எல்லா மக்களுக்கும் நிகழ்வுகள் புரியமால் இருக்கலாம். மக்கள் அனைவரும் உண்மையை அறிய வேண்டும். மக்களும் தங்களுடைய எதிர்ப்புக்களை, தங்களுடைய அதிருப்திகளை தெரிவிக்கக்கூடிய வகையில் சகல விடயங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காக நாங்கள் மக்கள் மத்தியில் சென்று விளக்கங்களை கொடுக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.

அதேபோல் சர்வதேச சமூகத்தினருக்கும் விளக்கங்களை கொடுக்க உள்ளோம். அவர்களுக்கு நிலைமை தெரியாமல் இல்லை. இருப்பினும் தற்போதைய அரசியல் நிலைமைகளால் பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை சுட்டிக்காட்ட உள்ளோம்.

ஏனெனில் ஒரு சமாதானத்தை முன்னெடுப்பது என்ற அடிப்படையில் யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்திய பிறகு ஒரு நாடு- ஒரு அரசாங்கம் மூன்றரை வருடமாக அதனை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமாக எதனையும் செய்யமுடியாது இருக்குமாக இருந்தால் அதனைப்பற்றி நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டியதொரு கடமைப்பாடு இருக்கின்றது. அந்த விளக்கத்தை நாங்கள் நிச்சயமாக கொடுப்போம்.

பொதுக்கட்டமைப்பு என்பது தற்போது உயிரிழந்து போய் உள்ளது. அது தொடர்பாக பேசுவதில் எதுவிதமான பிரயோசனமும் இல்லை.

திருமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடைசியாக புலிகள் மீதான தாக்குதல் திருகோணமலையில்தான் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலையைப் பொறுத்தவரை அது தமிழர் தாயகத்தின் ஒருபகுதியே என்றார் அவர்.
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 07-17-2005, 09:22 AM
[No subject] - by narathar - 07-17-2005, 02:48 PM
[No subject] - by narathar - 07-17-2005, 02:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)