Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது
#1
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது: உணர்ந்து செயற்படுவது சர்வதேச சமுகத்தின் பொறுப்பு - விடுதலைப் புலிகள்

இலங்கையின் தற்போதைய அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு இனப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் காண முடியாது என்பதே பொதுக்கட்டமைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு காண்பிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் திரு. தயா மாஸ்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

பொதுக்கட்டமைப்பில் நாம் கைச்சாத்திட்டிருந்தாலும், அது அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து ஆரம்பம் முதலே கேள்வியெழுப்பி வந்தோம். ஏதோ ஒரு வழியில் இதனைத் தடுத்தே ஆவார்கள் என்றும் எமக்கு தெரியும்.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பானது ஈழத்தமிழர்களுக்கு எதுவித தீர்வையும் பெற்றுத் தராது. இதனால்தான், சமாதான பேச்சுக்களின்போது நிரந்தரத் தீர்வு குறித்து விடுதலைப் புலிகள் பேசுவதற்கு முன்வரவில்லை. தெற்கில் இதற்கான ஒரு அரசியல் சூழ்நிலை இல்லாததுடன் இந்த அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு நிரந்தர தீர்வு பற்றி ஒருபோதும் பேச முடியாதென்பதை எமது அரசியல் ஆலோசகர் முனைவர் ஆன்ரன் பாலசிங்கம் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளார்.

நிரந்தர தீர்வென்பதை விட போரினாலும், கடல்கோள் அனர்த்தத்தினாலும், பாதிக்கப்பட்ட பல இலட்சம் தமிழ் மக்கள் தொடர்ந்து இன்னமும் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கக்கு எதுவுமே வழங்கக்கூடாது என்பதில் சிங்கள பேரினவாதம் தனது அனைத்து துறைகளையும், பயன்படுத்தியுள்ளமை இந்த தீர்ப்பின் மூலம்தெளிவாகியுள்ளது.

மனிதாபிமானம் இந்த நாட்டில் செத்துவிட்டதென்றாலும், இன்றைய யதார்த்த நிலையை என்றாவது இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கிளிநொச்சியில் தான் உள்ளது.

புலிகளுடன் எவ்வித உடன்பாட்டை ஏற்படுத்தினாலும் அதில் கிளிநொச்சியும் இன்றி அமையாததென்ற யதார்த்தத்தை சிங்கள பேரினவாதம் புரிந்து கொள்ளவி;லை.

இந்த தீர்ப்பின் மூலம் பொதுக்கட்டமைப்பு முக்கப்பட்டு விட்டது. இனி இது பற்றி கதைப்பதில் அர்த்தமில்லை. இது பற்றி இனி சர்வதேச சமுகம் தான் உணர்ந்து செயற்படவேண்டும். எனவும் குறிப்பிட்டு;ள்ளார்.
http://www.sankathi.net/index.php?option=c...=1619&Itemid=41
Reply


Messages In This Thread
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது - by narathar - 07-17-2005, 09:09 AM
[No subject] - by narathar - 07-17-2005, 09:22 AM
[No subject] - by narathar - 07-17-2005, 02:48 PM
[No subject] - by narathar - 07-17-2005, 02:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)