07-16-2005, 12:48 PM
Sooriyakumar Wrote:அண்ணாமாரே அக்காமாரே வாய்ச்சவடால் வேண்டாம்.. சண்டைக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் அங்கு போய் ஆதரவு கொடுங்கள். சமாதானம் வேண்டுவோர் எங்கிருந்தும் சமாதானத்திற்காக உழைக்கட்டும்.
சூரியக்குமார் நீர் சமாதானம் என்று எதைச்சொல்கிறீர்,
நீர் சமாதானம் என்று சொல்லுறதால இதுவரைக்கும் என்ன கிடைத்தது,ஆயுதப்போராட்டம் பிழையானது என்கிறீரா?
ஆயுதப்போரைக் கைவிடச்சொல்கிறீரா?
நாங்கள் எல்லோருமே போராடாமல் ஓடிவந்தவர்கள்தான், நீர் அடங்கலாக,ஆனால் உம்மைப்போல் சமாதனா சரணகதி ஆகி ,ஆகுதியான போராளிகளின் கனவுகளையோ,எம்மை நம்பி உயிர்,உடமை இழந்த மக்களையோ கைவிட நாம் தயாரில்லை.உம்மைப் போன்று புலத்தில் இருந்து நயவன்சகமான கருத்தியல்களை விதைப்பவர்களைவிட, முடிந்ததைச் செய்வோர் மேல்.மேலுள்ளவாறு கூறுவதற்கு உமக்கு எந்தத்தகுதியும் கிடையாது.போரிடும் போராளிகளுக்கும் அவர்தம் தலைவர்களுக்கும் மற்றும் மாவீரரின் உற்றாருக்குமே அத் தகுதி உண்டு.

