06-21-2003, 09:27 AM
படுவான் கரைக்கு
காடு தேனிக்கு
வயல் மீண்டும்
நீராடும் பெண்கள் தழுவ
பாடிப் பறிந்தோடும் நீருக்கு
மான் வற்றல் காயும் முற்றமோ
பாட்டி மடி தொற்றி
பண்டைக் கதைகள்
மகிழும் மதளைகட்கு
கோடிப் புறம்
கடந்து செல்வோர்
தாம் என்றோ தென்கிழக்கில் கேட்ட
கவி நினைந்து புன்னகைக்க
தலைமறையும் காதலற்கு
அதிகாலை பாற்கோலம் கீறி
பசு நடந்த தெருவோ
முன்னர் அரங்கத்தில்
அரிச்சுனனே நாண
வில்லசைத்த பாட்டன் வியக்க
வடமோடிக் கூத்தோடு
துள்ளல் நடையில்
திரிகின்ற விடலைகட்கு
யாரும் துணியாத
என் தாய் மண்ணின் நெடுங்கதவாம்
வாகரையின் வெண்மணலோ
அடம்பன் கொடி பரப்பும்
மரகத மணிகளின் மேல்
பவளம் பறிக்க
ஓடும் சிறாருக்கு
இந்த அமைதியின் எல்லாப் புகழும்
வடமுனையக் கடந்து சென்று
வன்னியிலே மயிர் பிடுங்க
வந்தோர் தலை பிடுங்கி
கல்லான உன் மாவீரக் குழந்தைகட்கும்
நாளையோ
அகதி முகாம்களிலே
மீண்டும் உறுகாமம் காண..
ஏங்கிக் கிடப்பவரை உசுப்பும்
''மன்னிப்பீர்
இன்னும் தயக்கமேன்
இது உங்களதும் தாய்மண்
கேளாமல் வாருங்கள்''
என்கின்ற மந்திரச் சொல்
மனசு நிறைய
வைத்திருக்கும் நாயகர்க்கு
காவியமோ
எல்லா நெருப்பும் அணைத்து
சாம்பரிலே புத்துயிர்க்கும்
என் படுவான் கரை தாய்க்கு.
வ.ஐ.ச. ஜெயபாலன்
காடு தேனிக்கு
வயல் மீண்டும்
நீராடும் பெண்கள் தழுவ
பாடிப் பறிந்தோடும் நீருக்கு
மான் வற்றல் காயும் முற்றமோ
பாட்டி மடி தொற்றி
பண்டைக் கதைகள்
மகிழும் மதளைகட்கு
கோடிப் புறம்
கடந்து செல்வோர்
தாம் என்றோ தென்கிழக்கில் கேட்ட
கவி நினைந்து புன்னகைக்க
தலைமறையும் காதலற்கு
அதிகாலை பாற்கோலம் கீறி
பசு நடந்த தெருவோ
முன்னர் அரங்கத்தில்
அரிச்சுனனே நாண
வில்லசைத்த பாட்டன் வியக்க
வடமோடிக் கூத்தோடு
துள்ளல் நடையில்
திரிகின்ற விடலைகட்கு
யாரும் துணியாத
என் தாய் மண்ணின் நெடுங்கதவாம்
வாகரையின் வெண்மணலோ
அடம்பன் கொடி பரப்பும்
மரகத மணிகளின் மேல்
பவளம் பறிக்க
ஓடும் சிறாருக்கு
இந்த அமைதியின் எல்லாப் புகழும்
வடமுனையக் கடந்து சென்று
வன்னியிலே மயிர் பிடுங்க
வந்தோர் தலை பிடுங்கி
கல்லான உன் மாவீரக் குழந்தைகட்கும்
நாளையோ
அகதி முகாம்களிலே
மீண்டும் உறுகாமம் காண..
ஏங்கிக் கிடப்பவரை உசுப்பும்
''மன்னிப்பீர்
இன்னும் தயக்கமேன்
இது உங்களதும் தாய்மண்
கேளாமல் வாருங்கள்''
என்கின்ற மந்திரச் சொல்
மனசு நிறைய
வைத்திருக்கும் நாயகர்க்கு
காவியமோ
எல்லா நெருப்பும் அணைத்து
சாம்பரிலே புத்துயிர்க்கும்
என் படுவான் கரை தாய்க்கு.
வ.ஐ.ச. ஜெயபாலன்

