Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும்
#1
மக்களின் நல்வாழ்வு சிங்களத்தின் பெருந்தன்மையினால் விளையப்போவதில்லை:பொட்டுஅம்மான்

இன்று எமது விடுதலைப்போராட்டம் ஒரு திருப்பம் அல்லது கேள்;வி அல்லது நாளை என்ன நடக்கும் என்ற வினாவின் நிலையில் நிற்பதை நாம் அறிவோம். நாளை நடக்கப்போவதை யாரும் அறியார். ஆனால் நாளை மட்டுமல்ல அதற்கு மறுநாளும் மறுநாளுக்கு மறு நாளும் நடக்கப் போவதை எம்மால் கூற முடியும். அது என்னவென்றால் எமது விடுதலையென்பது அல்லது மக்களின் நல்வாழ்வு என்பது சிங்களவர்களின் கருணையினாலோ சிறிலங்கா அரசின் பெருந்தன்மையினாலோ விளையப்போவதில்லை என்பது மட்டும் இன்றும் நாளையும் அதற்கு மறுநாளும் உறுதியாகக் கூறக்கூடியதாக இருக்கும்.எமது பலம், தமிழர்களின் பலம். அந்த பலமே எமக்குரிய விடுதலையை, எமது மக்களுக்குரிய நல்வாழ்வை பெற்றுத்தரும் என்பதே நாம் என்றென்றும் மனதில் வைக்க வேண்டிய எம்மனதில் கொள்ள வேண்டிய உறுதியான செய்தி.


நாளை யுத்தம் வெடிக்கலாம். அல்லது அது ஒரு வாரம் செல்லலாம். அல்லது உடனடியாகவே அதற்குரிய சூழல்கள் நிகழலாம். அரசியல்போக்குகள் எவ்வாறும் அமையலாம். இன்றைய அரசியல் சூழலை போராளிகளாகிய நீங்கள் அறியும் ஆவலில் இருப்பீர்கள். அந்த அரசியற் சூழல் ஒன்றே ஒன்றுதான் நேரடியாகக் கூறுவதாக இருந்தால் சிங்கள அரசாங்கம் போரைத் தொடங்கும் பழியை எமது தலையில் போடும் வகையிலே காரியங்களை ஆற்றி வருகிறது. சிறிலங்காப் படையினர் நேரடியாகவே
எதிரிகள் போருக்கான சூழலை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். எமது போராளிகள் மீதும் பொறுப்பாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தப்படுகின்றன் யுத்தம் எந்த நிலையிலும் வெடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகிவருகின்றன. அந்த வகையிலே போராளிகளாகிய நாம் இன்று செய்ய வேண்டியது எம்மைப் பலப்படுத்தி நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிக்ககூடிய நிலையில் இருக்க வேண்டும். எம்மைப் பலப்படுத்துவதன் மூலம் எமது இயக்கத்தைப் பலப்படுத்தி எமது தேசத்தையும் பலப்படுத்துகின்றோம். எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் பலத்தைப் பெருக்கிக் கொள்வதில் காலத்தைப் பயனுள்ளதாக்குவோம் என்று கூறி அதுவே நாம் சீலனின் அன்றைய கனவை நனவாக்கும் எனவும் தெரிவித்தார்.

http://www.tamilkural.com/newtamilkural/in...d=150&Itemid=52
Reply


Messages In This Thread
எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் - by narathar - 07-15-2005, 06:56 PM
[No subject] - by வினித் - 07-15-2005, 08:50 PM
[No subject] - by ஈழத்துளி - 07-15-2005, 11:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)