Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிதாமகன்
#1
விக்ரம் சூர்யா இணைந்து நடித்து பாலா இயக்கியுள்ள 'பிதாமகன்' படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. சில நகாசு வேலைகள் தான் நடந்து கொண்டுள்ளன.

<img src='http://www.thatstamil.com/images14/cinema/pita1-450.jpg' border='0' alt='user posted image'>

இந் நிலையில் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் இடையே கடும் போட்டா, போட்டி ஏற்பட்டதால், மிக நல்ல விலைக்கு படத்தை விற்றுள்ளாராம் தயாரிப்பாளர் ஏ.வி.துரை.

சுமார் ரூ. 6 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 9 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாம். இதனால், தயாரிப்பாளருக்கு சுளையாக ரூ. 3 கோடி தேறிவிட்டதாம்.

அதே நேரத்தில் வினியோகஸ்தர்களுக்கும் வாங்கிய விலையைப் போல பல மடங்கு
லாபம் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக வந்துள்ளதாம்.

விரைவில் தயாரிப்பாளர் ஏ.வி. துரையின் நண்பரான ரஜினிக்கு இந்தப் படம் போட்டுக் காட்டப்படவுள்ளது. பாடல்களிலும் பேக்கிரவுண்ட் இசையிலும் இளையாராஜா அசத்தி எடுத்துள்ளாராம்.

ஆளுக்கு ஒரு வெற்றிகரமான போலீஸ் படத்தை (சாமி, காக்க.. காக்க..) தந்துவிட்டு வந்த கையோடு இதில் மிக வித்தியாசமான வேடங்களில் நடித்துக் கலக்கியுள்ளனர் விக்ரமும் சூர்யாவும்.

இந்தப் படத்துக்குப் பின் அடுத்து எப்படிப்பட்ட படம் செய்வது என்று தெரியாமல் இருவரும் கொஞ்ச காலம் குழம்பப் போவது நிச்சயம் என்கிறார் பாலா சிரித்துக் கொண்டே.

அந்த அளவுக்கு கேரக்டர்களாகவே மாறிவிட்டார்கள் என்கிறார்.

<img src='http://www.thatstamil.com/gallery/pithamagan/n1.jpg' border='0' alt='user posted image'>

சிம்ரன், லைலா, ரசிகா ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. 'சேது' மற்றும் 'நந்தா'வுக்குப் பின் பாலாவிடம் இருந்து வரும் இந்தப் படத்தை கோலிவுட் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

நன்றி அதுதமிழ்.வணி
Reply


Messages In This Thread
பிதாமகன் - by Kanani - 10-08-2003, 08:37 AM
[No subject] - by yarl - 10-08-2003, 09:39 AM
[No subject] - by Paranee - 10-08-2003, 09:41 AM
[No subject] - by AJeevan - 10-08-2003, 10:43 PM
[No subject] - by arun - 10-19-2003, 04:52 PM
[No subject] - by AJeevan - 10-19-2003, 11:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)