Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொதுகட்டமைப்பு ஒப்பந்ததிற்கு இடைக்கால தடைஉத்தரவு
#2
பொதுக்கட்டமைப்புக்கு சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தடை!
[வெள்ளிக்கிழமை, 15 யூலை 2005, 13:16 ஈழம்] [கொழும்பு நிருபர்]
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்புக்கு சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.


ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் தாக்கல் செய்த பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான மனு இன்று விசாரனணக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட போது இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதம நீதிபதி சரத் என்.டி.சில்வா, நீதியரசர்கள் ராஜா பெர்னாண்டோ மற்றும் நிமல் காமினி அமரதுங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் தலைவி என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு எந்தவொரு பிரிவினருடனும் ஒப்பந்தங்களை செய்வதற்கு பூரண அதிகாரம் உண்டு. விடுதலைப் புலிகள் அமைப்பும் தேவையான வகையில் எந்த பிரிவினருடனும் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கு சுதந்திரங்களை கொண்டது.

ஆனால் பொதுக்கட்டமைப்பு நிதியம், பிரதேச செயலகத்தின் தலைமையகம் கிளிநொச்சியில் செயல்படுவது, மீளமைப்புத் திட்டங்களுக்கு பிரதேச குழுக்கள் ஒப்புதல் அளிப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 07-15-2005, 08:18 AM
[No subject] - by Niththila - 07-15-2005, 09:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)