06-21-2003, 09:26 AM
ஆரவாரமும்
ஆரோகராச் சத்தமும்
கூவியழைத்த வியாபாரக் குரல்களும்
ஓய்ந்துபோக
வேலவன் வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது.
சனநரல் வடிந்த நல்லூர்த் தெருக்களில்
மீண்டும் சுகம் வரத் தொடங்கிவிட்டது.
காற்றில் எழுவதும், குந்துவதுமாக
கடலை சுற்றிய கடதாசிகள் சில.
ஓருவரற்று உறைந்திருக்கும் வீதிகள்
எத்தனை அழகு.
இன்னும் அகற்றப்படாமல்
"இங்கே துப்புங்கள்" வாளிகள்.
மனிதவெட்கையற்ற வெளிகளே
ரம்யமானவை.
எவரும் வரமாட்டார்களா என்னிடம் என்பதாய்
தேர்முட்டிப்படிகள் பெருமூச்செறிகின்றன.
தினமும் வெளிவீதியுலாவிய அசதியில்
வள்ளி வலிதாளாமல் பள்ளியறையில்.
தந்தையைக் காணாதிருந்த தவிப்படங்க
தெய்வானை இந்திரலோகம் போய்விட்டாள்.
முருகன் இன்னும் விளையாட்டுப் பிள்ளைதான்
மயிலேறி போனான் காலையில்
கோயில் திரும்பவில்லை இன்னும்.
ஆலயத் கதவில் புூட்டு.
குருக்கள் வீட்டில் அன்ரனா திருப்பப்படுகிறது
பொதிகைக்காக.
மேற்கு வீதியில் முத்துவிநாயகரும்
ஈசானமூலையில் மனோன்மணியம்மனும்தான் பாவம்
இனி எவர் வந்து தேடுவர் இவர்களை.
பாதாளக்கிணற்றில் சாகஜம் புரிந்தோர்
பலகைகளைக் கழற்றிக்கொண்டு
போயிருப்பர் வல்லிபுரக் கோயிலுக்கு.
பாம்புக்காரன் எங்கு போயிருப்பான்?
திருவிழா என்றாலே களியாட்டம் என்றாயிற்று
எல்லோரும் ஊமையராகி
உண்டியலிலேயே கவனமாயிருக்கின்றனர்.
பிரசங்கக்காரர்களுக்கு பொன்னாடை கிடைத்திருக்கும்
தடவியடியிருப்பர் சந்தோஸத்தில்.
புூனூல் மார்பில் துலங்க
ஓரு பிராமணன் கொத்துரொட்டி கொத்தினானே
அவன் புரட்சிக்காரன்.
தலைவணங்கலாம் அந்தத் தகுதிக்கு.
உடல் வருத்தி உழைத்த பணம் நிலைக்கும்.
புூஜை செய்வதிலும் இது பெரிய தொழில்.
திலீபனின் நினைவுத்தூபியிருந்த இடமத்தில்
சிதிலமாகிய கற்கள் மீதாயினும்
யாரேனும் புூக்கள் வைத்திருப்பார்களா?
இடித்தவனை விடுங்கள்
தூபித்துண்டங்கள்மீது ஏறியிருந்தவர்களை
ஏன்ன செய்யலாம்?
இம்முறை நல்லபடியாக நடந்து முடிந்ததாம்
நல்லூர்த் திருவிழா.
கிழடொன்று கூறிச் சென்றதைக் கேட்க
சிரிப்பு வந்தது.
புதுவை இரத்தினதுரை
ஆரோகராச் சத்தமும்
கூவியழைத்த வியாபாரக் குரல்களும்
ஓய்ந்துபோக
வேலவன் வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது.
சனநரல் வடிந்த நல்லூர்த் தெருக்களில்
மீண்டும் சுகம் வரத் தொடங்கிவிட்டது.
காற்றில் எழுவதும், குந்துவதுமாக
கடலை சுற்றிய கடதாசிகள் சில.
ஓருவரற்று உறைந்திருக்கும் வீதிகள்
எத்தனை அழகு.
இன்னும் அகற்றப்படாமல்
"இங்கே துப்புங்கள்" வாளிகள்.
மனிதவெட்கையற்ற வெளிகளே
ரம்யமானவை.
எவரும் வரமாட்டார்களா என்னிடம் என்பதாய்
தேர்முட்டிப்படிகள் பெருமூச்செறிகின்றன.
தினமும் வெளிவீதியுலாவிய அசதியில்
வள்ளி வலிதாளாமல் பள்ளியறையில்.
தந்தையைக் காணாதிருந்த தவிப்படங்க
தெய்வானை இந்திரலோகம் போய்விட்டாள்.
முருகன் இன்னும் விளையாட்டுப் பிள்ளைதான்
மயிலேறி போனான் காலையில்
கோயில் திரும்பவில்லை இன்னும்.
ஆலயத் கதவில் புூட்டு.
குருக்கள் வீட்டில் அன்ரனா திருப்பப்படுகிறது
பொதிகைக்காக.
மேற்கு வீதியில் முத்துவிநாயகரும்
ஈசானமூலையில் மனோன்மணியம்மனும்தான் பாவம்
இனி எவர் வந்து தேடுவர் இவர்களை.
பாதாளக்கிணற்றில் சாகஜம் புரிந்தோர்
பலகைகளைக் கழற்றிக்கொண்டு
போயிருப்பர் வல்லிபுரக் கோயிலுக்கு.
பாம்புக்காரன் எங்கு போயிருப்பான்?
திருவிழா என்றாலே களியாட்டம் என்றாயிற்று
எல்லோரும் ஊமையராகி
உண்டியலிலேயே கவனமாயிருக்கின்றனர்.
பிரசங்கக்காரர்களுக்கு பொன்னாடை கிடைத்திருக்கும்
தடவியடியிருப்பர் சந்தோஸத்தில்.
புூனூல் மார்பில் துலங்க
ஓரு பிராமணன் கொத்துரொட்டி கொத்தினானே
அவன் புரட்சிக்காரன்.
தலைவணங்கலாம் அந்தத் தகுதிக்கு.
உடல் வருத்தி உழைத்த பணம் நிலைக்கும்.
புூஜை செய்வதிலும் இது பெரிய தொழில்.
திலீபனின் நினைவுத்தூபியிருந்த இடமத்தில்
சிதிலமாகிய கற்கள் மீதாயினும்
யாரேனும் புூக்கள் வைத்திருப்பார்களா?
இடித்தவனை விடுங்கள்
தூபித்துண்டங்கள்மீது ஏறியிருந்தவர்களை
ஏன்ன செய்யலாம்?
இம்முறை நல்லபடியாக நடந்து முடிந்ததாம்
நல்லூர்த் திருவிழா.
கிழடொன்று கூறிச் சென்றதைக் கேட்க
சிரிப்பு வந்தது.
புதுவை இரத்தினதுரை

