07-14-2005, 10:17 PM
<b>லண்டன் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு உச்சிவேளை அஞ்சலி</b><img src='http://news.bbc.co.uk/media/images/41303000/jpg/_41303563_4.jpg' border='0' alt='user posted image'>
கடந்த வியாழனன்று நடந்த லண்டன் குண்டுவெடிப்புக்களில் பலியான அனைவர்க்கும் பிரிட்டன் நெடுகிலும் இன்று உச்சிவேளை அஞ்சலி செலுத்தப்பட்டது.
சரியாக மதியம் 12 மணிக்கு உச்சிவெயிலில் அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
பிரித்தானிய மகாராணி எலிசபெத், அரசு மற்றும் மதத் தலைவர்கள் இந்த அஞ்சலியில் பங்கேற்றனர்.
ரயில்கள், வாகனங்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன.
இதற்கிடையில் இந்த குண்டுவெடிப்புக்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த குண்டுவெடிப்புக்களை நடத்தியதாகக் கருதப்படும் நான்கு இளைஞர்களில் மூன்று முஸ்லிம் இளைஞர்களின் சொந்த ஊரான
லீட்ஸ் நகரில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரானவை என்ற முழக்கங்கள் கொண்ட அட்டைகள் காணப்பட்டன.
<b>பஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரி புகைப்படம் வெளியானது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41304000/jpg/_41304887_hussain.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'><i>ஹாசீப் ஹூசைன்</i>
இந்தக் குண்டுவெடிப்புக்களில் பஸ் குண்டுவெடிப்பை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதான ஹசீப் ஹுசைன் என்ற இளைஞரின் புகைப்படங்களைக் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
டாவிஸ்டாக் சதுக்கத்தில் அந்த பஸ் வெடித்துச் சிதறிய போது அதில்
பலியான பதின்மூன்று பேரில் அவரும் ஒருவர் என்று தாங்கள் கருதுவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், குண்டு வெடிப்பை நடத்தியவர் என்று கருதப்படும் ஒருவரில் லீட்ஸ் நகர இல்லத்தை அடுத்த பகுதியிலிருந்து மக்களை
காவல்துறையினர் வெளியேற்றி இருக்கிறார்கள்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41304000/jpg/_41304879_hussaincctv_split_pa203.jpg' border='0' alt='user posted image'>
<i>பாரமான பை ஒன்றை அவர் எடுத்து வந்தார்</i>
அங்கு தடயங்களைத் தேடும் காவல்துறையினர், மக்களை இரண்டு பஸ்களில் வெளியேற்றிய பிறகு, குண்டுகளை செயலிழக்க வைக்கும் ராணுவக் குழு ஒன்று, கட்டுப்படுத்திய அளவில் ஒரு வெடிப்பை அங்கு நடத்தியது.
தவிர, லண்டனுக்கு வடக்கே ஏயில்ஸ்பரி என்ற ஊரிலும், தடயங்கள் வேண்டி காவல்துறையினர் சோதனைகளை நடத்திவருகிறார்கள்.
இதுவரை யாரும் கைதாகவில்லை; ஆனால், குண்டுவெடிப்பை நடத்திய நான்காவது நபர் இங்கே வசித்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி நிருபர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதே வேளை, குண்டுவைத்தவர்களுடன் தொடர்புடைய ஒரு ஐந்தாவது நபரையும் தாங்கள் தேடி வருவதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.
BBC News</span>