07-14-2005, 08:58 PM
லண்டன் குண்டுவெடிப்பு சூத்ரதாரியும் பாக். வம்சாவழியைச் சேர்ந்தவர்
லண்டன், ஜூலை 15: லண்டன் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சூத்ரதாரியாக செயல்பட்டவர் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. மேலும் நான்காவது மனிதவெடிகுண்டு யார் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரிட்டனை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்கு மனித வெடிகுண்டு தாக்குதல்கள்தான் காரணம் என்று பிரிட்டன் போலீஸôர் தெரிவித்தனர். இந்த மனிதவெடிகுண்டுகளாக செயல்பட்டது பிரிட்டனில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தான் வம்சாவழி இளைஞர்கள் ஷெஷாகத் தன்வீர்(22), ஹஸீப் உசேன் (19) முகம்மது சித்திக் கான்(30) உள்ளிட்ட நான்கு பேர் என்றும், இவர்கள் 3 பேரும் பிரிட்டனின் யார்க்ஷைர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரிட்டன் போலீஸôர் புதன்கிழமை தகவல் வெளியிட்டனர். நான்காவது நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
மொத்தம் ஏழு முதல் எட்டு பேர் கொண்ட சதி கும்பல் தான் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றியிருக்கிறது என்று நம்பப்படுகிறது. ரயில்நிலையங்கள், மாடி பஸ்ஸில் மனிதவெடிகுண்டாக செயல்பட்டு நாசவேலைகளை அரங்கேற்றியவர்களுக்கு, பாலபாடம் நடத்தியவர் யார் என்பது பற்றி லண்டன் பத்திரிகைகளில் பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளன. அதன் விவரம்:
சதி திட்டத்தின் சூத்திரதாரியும் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதற்கான சில தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த நபர் கடந்த மாதமே பிரிட்டனுக்கு வந்து, மனித வெடிகுண்டாக செயல்பட்டவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று தாக்குதல் திட்டத்தை தயாரித்துக் கொடுத்திருக்கிறார். வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு எப்படி வெடிக்கச்செய்வது என்பது பற்றியும் அந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். தனது கடமையை முடித்துக்கொண்டு, குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஜூலை-7 ம் தேதிக்கு முந்தைய நாள் லண்டனை விட்டு அவர் வெளியேறிவிட்டார்.
இந்த சூத்திரதாரிக்கு இதற்கு முன்பு நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. இவருக்கு சர்வதேச பயங்கரவாதி ஒஸôமா பின்லேடனின் கூட்டாளிகளுடன் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இந்த சதிகும்பலைச் சேர்ந்த எஞ்சிய இரண்டுபேரைக் கண்டுபிடிப்பதற்காக லண்டன் போலீஸôர் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பதிவான கேசட்டுகளை சோதனையிட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவர் லூட்டன் பகுதியில் இன்னமும் பதுங்கியிருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது என்பதால் அப்பகுதியில் போலீஸôர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
<b>மாயமான பேராசிரியர்</b>
இதற்கிடையே எகிப்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர் அஸ்டி -இல் -நாசர் (33) என்பவர் மீது லண்டன் போலீஸôருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராய் பணியாற்றிவந்தார். சமீபத்தில்தான் பிரிட்டனில் இருந்து வெளியேறினார். அவருடைய வீடும் லீட்ஸ் நகரில்தான் இருக்கிறது. தனக்கு விசா பிரச்சினை இருப்பதாக அக்கம்பக்கத்தாரிடம் சொல்லிவிட்டு அவர் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இது தவிர மேலும் சில சந்தேகத்துக்குரிய நபர்களைப் பற்றியும் விசாரிக்கும் போலீஸôர், தொலைபேசி அழைப்புகள், செல்போன் உரையாடல் உள்ளிட்டவை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே லீட்ஸ் பகுதியில், ஒரு இடத்தில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் அந்தப்பகுதியில் போலீஸôரும், வெடிகுண்டு நிபுணர்களும் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். ஆனால் ஆட்சேபகரமான எந்தபொருள்களும் கிடைக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடையாளம் தெரிந்தது: இதற்கிடையே லண்டன் குண்டுவெடிப்புச் சதியில் நான்காவது மனித வெடிகுண்டாக செயல்பட்டவர் எஜாஸ் அல்லது நதீம் பியாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்தான் கிங்ஸ்கிராஸ் ரயில்நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளார். இவர் லீட்ஸில் தங்கியிருந்தார். தனது சக சதிகாரர்களுடன் லூட்ஸன் நகரில் இவர் இணைந்து கொண்டார் என்று டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Dinamani

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>