Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமாதானப் பொறியும், வட அயர்லாந்து தரும் பாடமும்.
#4
அயர்லாந்து மக்களின் போராட்டத்தில் இருந்து பார்வையும் சிலபதிவுகளும்


" இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும்வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்கமுடியாத வரலாற்று நியதி."

தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே.பிரபாகரன்.

தமிழ் மக்களைப்போல் தொன்மையான பாரம்பரியத்தை கொண்ட அயர்லாந்து மக்கள் பலநூற்றாண்டுகளாக அன்னியரால் ஆளப்பட்ட இனமாக வாழ்ந்து வந்தனர். கிறீஸ்து சகாப்தத்தின் முன்பே பண்பான சமூகமாக விளங்கிய புராதன அயர்லாந்து வாசிகளுடன் கெல்ரிக் மக்களின் வருகையும் சேர்ந்து அயர்லாந்தின் மலர்வு ஆரம்பமாகின்றது. இவர்கள் கிரேக்கர்இ ரோமர் என்போரில் இருந்து வேறுபட்டவர். இதனைத் தொடர்ந்து கிறீஸ்தவத்தின் வருகையும் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் கிறீஸ்தவத்தை பரப்பிய பற்றிக் சுவாமிகளது செயல்பாடுகளும் அயர்லாந்தின் தனித்துவத்திற்கு மெருகேற்றின. பற்றிக் சுவாமிகள் கிறீஸ்தவத்துடன் கெல்ரிக் பண்பாட்டையும் கலந்து அமைதிகண்டார். அயர்லாந்து முழுவதும் தாபிக்கப்பட்ட கீறீஸ்தவ மடங்கள் கல்வி நிலையங்களையும்இ தொழில் பட்டறைகளையும் கொண்டு விளங்கின. இவற்றை அடுத்து கிராமங்கள் உருவாகின. அயர்லாந்து ஞானிகளதும் சான்றோர்களதும் மண்ணாக மலர்ந்தது.

இந்த அமைதியான நிலையில் வைக்கிங்ஸ் என்னும் மறவர்களின் (ஸ்கண்டிநேவியாவில் இருந்து) வருகை பெரும்பாதிப்புக்களை கொண்டுவந்தது இவர்கள் இருநூறு ஆண்டுகளாக கிறீஸ்தவ மடங்களை கொள்ளையடித்தனர். இது அயர்லாந்து மக்கள் வாழ்விலும் கட்டிட அமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது இருந்தபோதும் பத்தாம் நூற்றாண்டில் வைக்கிங்ஸ் அயர்லாந்தில் நிரந்தர குடியேற்றங்களை ஏற்படத்தினர். இவர்களது கப்பல் ஓட்டும் ஆற்றலும்இ கப்பல் கட்டும் ஆற்றலும் அயர்லாந்திற்கு புதிய வலுவைக் கொடுத்தது. காலகதியில் வைக்கிங்ஸ்சும் அயர்லாந்து மக்களாகினர்.

அடுத்த அலையாக வேல்ஸ் நாட்டில் இருந்த அங்கிளிக்கன்ஸ் என்போரும் பிரான்சில் இருந்து நோமன்ஸ் என்போரும் அயர்லாந்துக்குள் புகுந்தனர். அயர்லாந்தின் ஒரு பகுதியான லென்ஸ்ரர் நாட்டின் மன்னன் உள்நாட்டின் பிரச்சனையை தீர்பதற்காக பிரான்சில் இரந்து நோமன்ஸ் மற்றும் வேல்ஸ்நாட்டில் இருந்து அங்கிளிக்கன்ஸ் என்போரை அழைத்தான். முடிவில் ஓரு அங்கிளிக்கன் நோமன் லென்ஸ்ரரின் மன்னனான். இதனால் சஞ்சலம் அடைந்த ஆங்கில மன்னன் இரண்டாம் ஹென்றி வின்ஸ்டர் ஒப்பந்தம் மூலம் அயர்லாந்து முழுமைக்கும் பெரிய அரசனானான்.
16 ஆம் நூற்றாண்டில் முதலாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சியில் அயர்லாந்து கத்தோலிக்க மக்களை புரட்டஸ்தாந்து நம்பிக்கைக்கு மாற்றுவதில் ஆங்கிலேயர் ஆணித்தரமாக நின்றனர். மாற்றத்தை மறுத்தவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு புதிதாக குடியேறிய ஸ்கொட்டிஸ் மக்களுக்கு வழங்கப்பட்டது. இவற்றிற்கு எதிரான அயர்லாந்து மக்களின் கலகங்கள் யாவும் குறம்வெல் என்பவனின் தலைமையில் பெரும் பலம் கொண்டு அடக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் அயர்லாந்து மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இருந்தபோதும் 18 ஆம் நூற்றாண்டின் முடிவில் இருந்து பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் வடிவம்பெறத்தொடங்கன. 1798 இலும் 1803 லும் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் விளைவாக அயர்லாந்தவர் என்ற புதிய தேசிய உணர்வு ஒன்று பிறந்தது. ஆயுதப்போராட்டங்களுடன் அரசியல் இயக்கங்களும் பிறப்பெடுத்தன. இந்த எதிர்ப்புக்கள் யாவுமே பிளைத்துப்போக அயர்லாந்து மீதான ஆங்கிலேயரின் ஆதிக்கம் மேலும் இறுக்கம் பெற்றன.

இந்த நிலையில் 1840 இல் ஏற்பட்ட பெரும் பஞ்சம் அயர்லாந்து மக்களை பெரும் அழிவுக்கு உட்படுத்தியது. ஆயிரக்கணக்கில் சிறார்களும் பெண்களும் ஆண்களும் பட்டினியால் மடிந்தனர். வசதி படைத்தோர் லட்சக்கணக்கில் அமெரிக்காவிற்கு குடியேறினர். இருந்த போதும் இந்த கொடிய பட்டினிச்சாவு அயர்லாந்து மக்களின் கலாச்சார உணர்வுக்கும் தன்னம்பிக்கைக்கும் தூபம் இட்டன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட எழுச்சி 1916 இல் இடம்பெற்றது. ஈஸ்ரர் புரட்சி என வரலாற்றில் அழைக்கப்படும் இந்தக் கிளர்ச்சி இராணுவ பார்வையில் பிழையான நேரம் என்பர். ஆயுதப்பற்றாக்குறை (டேவிட்டுக்கும் கொலியாத்துக்கும் உள்ள விகிதாசாரம்) உள்ளக முரண்பாடு யேர்மணியில் இருந்து எதிர்பார்கப்பட்ட உதவிகள் கிடைக்காமை யாவும் சேர்ந்து இதைப் படு தோல்விக்கு இட்டுச்சென்றது. இருந்தபோதும் இதில் பங்கு கொண்டோரின் தியாகங்களும்இ மாவீரமும் வீரமரணங்களும் அயர்லாந்து மக்களிடையே சுதந்திரத் தீயை ஏற்றிவிட்டது. இரத்தம் தோய்ந்த சுதந்திரப்போராட்டத்திற்கான விதைகளை விதைத்தது என்பர்.
ஈஸ்ரர் திங்கள் ஏப்பிரல் 24 1916 ஆம் ஆண்டு ஆயுதபாணிகளாக 1000 முதல் 1500 வரையிலான அயர்லாந்து ஆன்களும் பெண்களும் அயர்லாந்து மீதான பிரித்தானியரின் ஆட்சிக்கு முடிவுகட்டி 32 மாவட்டங்களைக் கொண்ட லென்ஸ்ரர், ன்ஸ்ரர், அல்ஸ்ரர், கொனொற் ஆகிய மாநிலங்களைக் கொண்ட அயர்லாந்தில் பூரண சுதந்திரம் கொண்ட குடியரசை நிறுவும் இறுதிநோக்குடன் டப்ளின் நகரை முற்றுகையிட்டனர். இதற்கு பற்றிக் பியேர்ஸ் யேம்ஸ் கொனொலி என்போர் தலைமைதாங்கினர். இந்த முயற்சி வெற்றிஅளிக்காது எனத்தெரிந்திருந்தும் அவர்கள் போராடி மாண்டனர். ஏன்?. இந்தப் புரட்சிக்கு அவர்களை இட்டுச்சென்ற காரணிகள் மிகச் சிக்கலானவை. சோன் ஓ போலெயின் (Sean o' Faolain) என்னும் அயர்லாந்து எழுத்தாளர் இதனை ஒரு வரலாற்று முரண்பாட்டுச்சிக்கல் என வர்ணிக்கின்றார். அழிவிலும் தோல்வியிலும் முடிந்தபோதும்இ அந்த எழுச்சியின்போது மக்கள் ஆதரவு கொடுக்காதபோதும் அவர்கள் மரணம் அவர்களை தேசத்தின் மாவீரர்களாக்கியது. பிரித்தானியர்களால் இன்றுவரை இதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அயர்லாந்து மக்களின் அபிலாசைகளை அவர்களது குணாம்சங்களை பிரித்தானியர் பிழையாக விளங்கிக்கொண்டதே இதற்கு காரணம் என இவர் கூறுகின்றார். ஆங்கிலத்தைப் பேசி அவர்கள் பழக்கவளக்கங்களைத் தழுவி அவர்களைப்போல் சிந்திக்கும் அயர்லாந்தின் உயர்ந்தோர் குழாம் இதில் பங்குகொள்ளவில்லை. மாறாக தங்கள் நிலத்தை வாழ்வை இழந்த மண்ணின் மைந்தர்களே இதில்பங்கேற்றனர்.

அயர்லாந்து குடியரசின் தற்காலிக அரசிற்கான 1916 ஆம் ஆண்டுப் பிரகடனம்.
ஈஸ்ரர் திங்கள் ஏப்பிரல் 24, 1916 மதியம் 12 மணி 4 நிமிடங்கள் ஒரு சடிதியான நிசப்தம் ஓ கோனல் வீதியில் அமைந்திருந்த பெரிய தபால் அலுவலக கட்டிட படிகளில் நின்றவாறு சுதந்திர அயர்லாந்திற்கான வரலாற்றுப் புகழ்பெற்ற பிரகடனத்தை இந்தப் புரட்சிக்குத் தலைமைதாங்கிய பற்றிக் பியேர்ஸ் வெளஹயிட்டார்.

" அயர்லாந்தின் உடைமைக்கும் அதனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் தடைகள் அற்ற ஆணைக்கும் இறைமைக்கும் பிரிக்கப்படமுடியாத அயர்லாந்தின் உரிமை அந்தமக்களுக்கே உண்டு என்பதை நாம் பிரகடனப்படுத்துகின்றோம். அந்த உரிமையை நீண்ட காலமாக அபகரித்த அன்னிய மக்களினதும் அன்னிய அரசாங்கத்தினதும் செயல்பாடுகள் அழித்துவிடவில்லைஇ ஒருகாலமும் அழித்துவிடவும் முடியாது. அயர்லாந்து மக்களை அழித்தொழிப்பதன் மு~லமே அந்த உரிமையையும் அழிக்கலாம்"
மரணத்தில் இருந்தே வாழ்வு ஊற்றெடுக்கின்றது; நாட்டுப்பற்றுக் கொண்ட ஆண்களதும்இ பெண்களதும் கல்லறைகளில் இருந்தே வாழும் தேசங்கள் ஊற்றெடுக்கின்றன என முழங்கிய பற்றிக் பியேர்ஸ் குடும்பத்திற்கு ஒரு தனிமனிதன் எப்படியோ அப்படியே மனுக்குலத்திற்கு ஒரு பிறிதான தேசமும். தனிமனிதனின் ஆத்மபலத்தை உள்வாங்கும் ஒரு குடும்பமே பூரணமான குடும்பமாகும். அதேபோல் பிறிது பிறிதான தேசங்களின் இருப்புக்கள் புனிதமாகக் கொள்ளப்படும் ஒரு உலகமே பூரணமான உலகமாகும் என்ற யேம்ஸ் கொனொலி உட்பட எழுவர் இப்பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர்இ இதற்காக பற்றிக் பியேர்ஸ் இயேம்ஸ் கொனொலி மற்றும் பன்னிருவர் இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டுக்கொல்லப்பட்டனர். பற்றிக் பியேஸ் மே மாதம் 3 ஆம் திகதி 1916 ஆம் ஆண்டு அதிகாலை 3.30 மணியில் சுட்டு கொல்லப்பட்டார். குற்றவாளிக் கூண்டில் இருந்து மரணத்துக்கு முகம் கொடுத்த வேளையிலும் பியேஸ் தன்னை தண்டித்தோரைப் பார்த்து "நாங்கள் தோற்றது போல் உள்ளது. நாங்கள் தோற்கவில்லை. போராட மறுப்பது தோற்தாகும். போராடுவது என்பது வெற்றியாகும். எனக்கூறினான்." பிரிபுபட்ட அயர்லாந்து அயர்லாந்தின் சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக அயர்லாந்து துண்டாடப்பட்டது. 26 மாவட்டங்களைக் கொண்ட தெற்குப் பகுதி சுஹல சுதந்திரத்தைப் பெற 6 மாவட்டங்களைக்கொண்ட வடபகுதி பிரித்தானியாவின் பிரதேசமாக்கப்பட்டது அயர்லாந்தின் போராட்டத்தில் மைக்கல் கொலின்ஸ்சும் ஈமொன் டி வலராவும்

ஈமொன் டி வலெறா (1882...1975) 93 ஆண்டுகள் வாழ்ந்தார்இ இவரது சகாவான மைக்கல் கொலின்ஸ் (1890...1922) 32 ஆண்டுகள் வாழ்ந்தார். முன்னவர் பழுத்த வயதில் இயற்கை மரணத்தை தழுவ இபின்னவர் அவரின் சகாக்களால் படுகொலை செய்யப்பட்டார். டி வலராவின் ஆணையை ஏற்று பிரித்தானியாவுடன் கொலின்ஸ் பேச்சுவார்த்தையில் ஏடுபட்டு 1921 இல் டப்ளினை தலைநகராகக் கொண்ட அயர்லாந்திற்கு டொமினியன் அந்தஸ்து கிடைத்தது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சுதந்திரத்திற்கு போராடியோர் பிளவு பட்டனர். முடிவில் மைக்கல் கொலின்ஸ் தன் உயிரையே கொடுத்தார். சுதந்திர அயர்லாந்தின் பிரதமராகவும் ஜனாதிபதியுமாக இருந்த டி வலெரா கொலின்ஸ்சுஹன் வீழ்ச்சிக்கு காரணம் என்ற கருத்துக்கள் அண்மைக்கால ஆய்வுகளில் தொனிப்பதைக் காணலாம். ரிம் பற் கூகன் (Tim Pat Coogan) இதில் குறிப்பிடத்தக்கவர். 1916 இல் இடம்பெற்ற எழுச்சியை தொடர்ந்து தொடர்ச்சியாக இடம்பெற்ற அயர்லாந்து சுதந்திர போராட்டத்தின் இரு பெரும் காவிய நாயகர்கள் இவர்கள் எனலாம்.

அயர்லாந்து தேசம் எப்படி அமையவேண்டும் எனக் கனவுகண்ட டி வலெறா
"நாங்கள் விரும்பும் இலட்சிய அயர்லாந்தின் மக்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்காக மாத்திரமே பொருட்செல்வத்தை மதிப்பர்இ இவர்கள் குறைந்த வசதிகளுடன் திருப்திகொண்டு தமது ஓய்வு நேரத்தை உயர்வான சிந்தனைகளுக்கு அர்ப்பணிப்பர். தேசத்தின் நாட்டுப்புறங்கள் கலகலப்பான குடிமனைகளையும்இ அதன் வயல்களிலும் கிராமங்களிலும் குத்தல்இ இடித்தல் கொழித்தல் புடைத்தலென படைப்போசையின் ஒலியும்இ குறும்பான சிறுவர்களின் குதூகலமும் உடற்பலம் மிக்க வாலிபரின் போட்டிகளும் வனிதையரின் சிரிப்பொலியும்இ நெருப்பு புகையும் அடுப்பங்கரை முதுமையின் அழகு கொட்டும் ஞானத்தின் அரங்காகவும் இருக்கும் எனக் கூறுகின்றார்.

டி வலெறா கூறும் உயர்ந்த சிந்தனைகளுள் மொழி முதல் இடத்தைப் பெறுகின்றது. (அவர் குறிக்கும் மொழி தொன்மையும்இசெம்மையும் கொண்ட அயர்லாந்தின் ஹேலிக் மொழியாகும்) எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையதுஇ எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும். ஆயிரம்இ ஆயிரம் ஆண்டு காலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது. அவர்களின் சிந்தனைகளும் இஅனுபவங்களும் இந்த மொழியில்தான் பாதுகாக்கப் பட்டுள்ளது. அயர்லாந்தில் இன்றுபேசப்படும் இந்த மொழி எமது மூதாதையர் பேசிய மொழியே. மூவாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றின் வாகனமாக விளங்கும் இந்த மொழி மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டதாகும். ஆழமான அனுபவ ஞானங்களையும் வாழ்வுபற்றிய பார்வையில் கிறி'ஸ்தவ ஆத்மானுபவங்களையும் சுமந்து நிற்கும் ஒரு தத்துவத்தின் வெளஹப்பாடே எமது மொழி. இதனை இழப்பது என்பதை வெறும் கனவாகக் காண்பதுகூட தாங்கமுடியாததாகும். இதனை விட்டுப் பிரிவது என்பது எம்மில் இருந்து ஒரு பெரும் பாகத்தை இழப்பது போலாகும். எமது பாரம்பரியத்தின் திறவுகோலை இழப்பது போலாகும். மரத்தில் இருந்து அதன் ஆணிவேரை தகர்ப்பதற்குச் சமனாகும். மொழியின் இழப்புடன் பாதித்தேசத்திற்கு மேல் நாம் என்றுமே கட்டிஎழுப்ப கனவுகாணமுடியாது " எனக்குறிப்பிடுகின்றார்.
இன்று அயர்லாந்தின் அரச கல்விக்கூடங்கள் யாவற்றிலும் அயர்லாந்து மொழி கற்பிக்கப்படுகின்றது. அத்தோடு சில அரச நிர்வாகப் பதவிகளுக்கு இந்த மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி போன்று தொன்மையும் செம்மையும் கொண்ட மொழியாக இருப்பினும் எமது சங்கப் பாணர்களை ஒத்த பாடுனர்களைக் கொண்ட மொழியாக இருப்பினும் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதையொத்த சான்றோர் வாக்கியங்களைக் கொண்டிருப்பினும் நூற்றாண்டுகால அன்னியர் ஆட்சியினால் அயர்லாந்து மொழி அதன் பாவனைத் தொடர்ச்சியை இழந்து விட்டது. நூற்றாண்டுகாலமான ஆங்கிலமயமாக்கலும் எலிசபெத்தியரின் அமுக்கங்களும் அயர்லாந்து மொழியினை புறக்கணித்தன. சுதந்திரப் போராட்டத்தின் உடன் நிகழ்ச்சியாக ஏற்பட்ட தேசியமும் மறுமலர்ச்சியும் அயர்லாந்து மொழிக்கு இன்று புதிய சக்தியை அளித்துள்ளது. இருப்பினும் ஒரு மொழியின் இருப்பு அதன் தொன்மையில் அல்ல அதனது தொடர்ச்சியில் தங்கியுள்ளது என்பதை அயர்லாந்து மொழியின் இன்றைய நிலைப்பாடு காட்டி நிற்கின்றது.

சீரிளமைத்திறம் கொண்ட தமிழ் மொழியோ அன்னியர் ஆட்சிகளின் அமுக்கங்களையும் தாண்டி சிங்களம் மட்டும் என்ற கோசங்களுக்கும் மசுங்காது சுயநிர்ணயப் போராட்டம் வரித்துக்கொண்டுள்ள போர்க்குணத்தாலும் போரியலாலும் புதிய வீரியத்தைப் பெற்றுள்ளது எனலாம். புலம் பெயர்ந்த தமிழர்களின் புதிய அனுபவங்களும் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பாடு பொருட்களையும் அளித்துள்ளது எனலாம். பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும் போராளிக் கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்குப் புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும் வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.

அயர்லாந்து மக்கள் பல நூற்றாண்டுகள் போராடிய போதும் தொடர்ச்சியான போராட்டம் 1916 இல் இருந்தே ஆரம்பித்தது எனலாம். 1937 இல் சுதந்திர அயர்லாந்திற்கான புதிய அரசியல்யாப்பு அங்கீகரிக்படும்வரை போராட்டம் தொடர்ந்தது. இருந்தபோதும் பற்றிக் பியேர்ஸ்சின் 1916 பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பிரிபுபடாத அயர்லாந்திற்கான போராட்டம் ஏதோவகையில் இன்றும் தொடர்கின்றது.
தமழ்ஈழப் போராட்டமும் அயர்லாந்து சுதந்திரப் போராட்டமும் தனக்குச் சொந்தமான பிரச்சனைகளைத் தீர்க்கும்போதும் இன்னல்களை அனுபவிக்கும் போதும் உருவாகும் பண்பு ஒவ்வோர் இனத்திற்கும் தேசத்திற்கும் வேறுபடலாம். இந்த இயல்பிற்குப் பதிலாக சர்வதேசத்தன்மை என்ற மேற்பூச்சை பூசு கோலம் காட்டுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே தமிழ் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தையும் அயர்லாந்து மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஒப்பு நோக்கி தீர்வு வளங்க நான் முற்படவில்லை. மாறாக அயர்லாந்து மக்களின் போராட்டத்தை ஓரளவு தன்னும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் எனற ஆதர்சத்தின் விளைவே இக்கட்டுரை.
ம.தனபாலசிங்கம்
சிட்ணி அவுஸ்திரேலியா
http://www.erimalai.info/2005/march/articl...rish-rebels.htm
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 07-11-2005, 01:00 AM
[No subject] - by narathar - 07-11-2005, 01:17 AM
[No subject] - by narathar - 07-14-2005, 07:59 PM
[No subject] - by narathar - 07-14-2005, 08:11 PM
[No subject] - by Niththila - 07-15-2005, 09:08 AM
[No subject] - by Thala - 07-15-2005, 10:11 AM
[No subject] - by ஈழத்துளி - 07-16-2005, 12:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)