Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் விடுதலை புலிகள்-கடற்படையினர் நேரடி சண்டை
#6
விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் சம்பவம் குறித்து சந்திரிகா கவலை???????????????

விடுதலைப்புலிகள் ராணுவத்துக்கெதிரான சிறிய தாக்குதல்களை அதிகரித்துவருகிறார்கள், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை அலுவலகப் பொறுப்பாளிகளை தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு திரும்ப அழைத்துக்கொண்டுள்ளனர் என்று ராணுவம் கூறிவரும் நிலையில், திருகோணமலை வன்செயல்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜ்னாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவ்வாறான் அசம்பாவித சம்பவங்கள் குறித்தும், இந்த வார முறபகுதியில் திருகோணமலை விடுத்லைப்புலிகள் அலுவலகம் தாக்கப்பட்டு புலிகள் இயக்க மூத்த உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கையில், ஜ்னாதிபதி, இந்த வாரம் 11ம் திகதியிலிருந்து, படைத்துறை தலைவர்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு சபையுடன் ஜனாதிபதி திருகோணமலையில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்ததாகவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்ய கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சுனாமி பொதுக்கட்டமைப்பின் உச்ச சபைக்கு அரச பிரதிநிதியாக, அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக , இன்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவப் பேச்சாளரும் அமைச்சருமான நிமல் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்தார். சுனாமி பொதுக்கட்டமைப்பின் ஏனைய சபைகளுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் , இது சமாதானத்தைக் குழப்பும் சக்திகளின் செயல் என்றும் இத்தகைய சம்பவங்களை தடுக்க ஜனாதிபதி ஆவன செய்துவருவதாகவும் கூறினார்.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அரசக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணம் செய்யும் போது அவர்களுக்கு தக்க வழித்துணை தருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசு புலிகள் இயக்கத்தினர் பயணம் செய்கையில் பாதுகாப்பு தருவது குறித்து முழு மனதுடன் இருக்கிறது. ஆனால் எப்படியான பாதுகாப்பு போன்ற நடைமுறை விஷயங்களில்தான் கருத்துவேறுபாடு நிலவுவதாகக் கூறினார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Nitharsan - 07-14-2005, 05:53 PM
[No subject] - by stalin - 07-14-2005, 06:07 PM
[No subject] - by Vishnu - 07-14-2005, 06:15 PM
[No subject] - by வினித் - 07-14-2005, 06:37 PM
[No subject] - by வினித் - 07-14-2005, 07:23 PM
[No subject] - by MUGATHTHAR - 07-14-2005, 07:56 PM
[No subject] - by stalin - 07-15-2005, 04:18 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)