07-14-2005, 05:53 PM
திருமலையில் விடுதலைப் புலிகள் - கடற்படையினர் நேரடி மோதல்
திருகோணமலை மாவட்டம் கும்பிறுப்பிட்டிப் பகுதியில் அமைந்திருக்கும் ஜேர்மன் வானொலி நிலையத்திற்கு அருகில் இன்று மாலை 6.30 மணியளவில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்குமிடையே நேரடி மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும்இ இதில் ஒரு போராளி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய இரு போராளிகள் மீது கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும்இ இதனையடுத்து போராளிகளும் பதில் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இதனையடுத்து சில நிமிட நேரம் இரு தரப்பினரிடையேயும் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது ஒரு போராளி உயிழந்ததாகவும் மற்றையவர் படுகாயமடைந்ததாகவும்இ தமது தரப்பில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றிய விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் எவையும் எமக்குக் கிடைக்கவில்லை.
இதேவேளை இந்த சம்பவத்தையடுத்து கும்புறுப்பிட்டிப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். அதேபோன்று விபுலானந்த புரப் பகுதி மக்கள் இடம்பெயர முடியாதபடி சிறீலங்கா கடற்படையினர் அவ்விடத்தை சுற்றி வளைத்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க இப்பகுதியைச் சேரந்த கந்தையா ராசன் மற்றும் தங்கராசா கேதீஸ்வரன் ஆகியோர் காணாமல் போயுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
3ம் கட்டைப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் நிலாவெளி மற்றும் கோபாலபுரப் பகுதி படைத் தளங்களிற்கு அண்மையாக வசித்த மக்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு நகர்;ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை திருமலை மாவட்டத்தில் மக்கள் மிகவும் பீதியடைந்த நிலையில் காணப்படுவதாக எமது திருமலைச் செய்தியாளர் அறிவித்துள்ளார்
நன்றி:சங்கதி

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>