06-21-2003, 09:26 AM
இம்முறையும் ...........
இம்முறையும்
உன்மீதான மறுதலிப்பு அற்றுப்போக
சிறைக் கதவுூடே
வெளியே வந்தாய்.
ஓயாது நீளும் நம் துயருக்கும்
உனக்கான கொடூரத்துக்கும் முடிவாய்
நீதிமன்றின் ஆணை ஒலித்தது.
நண்பனே!
நீ வெளியே வந்தாய்
கம்பி வரிகளைவிட்டு நிரந்தரமாகவே.
இன்று சூரியன்
அதிகம் பிரகாசித்தொளிர்ந்தது.
இனிய பறவையின் கானத்தில்
எம் காதுகள் நிரம்பின.
துப்பாக்கி முனையில் நீ
கொழுவுண்டு போகப்பட்டபோது
அவர்களுக்கான காலமாயிருந்தது.
எம் ஆர்ப்பரிப்புக்கள், அமைதிகள்
எவையும் செயலற்று
காற்று வெளியில் வரைந்த கோடுகளாயின.
இப்போது,
நமக்கான காலமெனில்
மறுபடியும் சிறைக்கதவுக@டே
வேறும் பலர் வரக்கூடுமா?
ஞாபகன்
இம்முறையும்
உன்மீதான மறுதலிப்பு அற்றுப்போக
சிறைக் கதவுூடே
வெளியே வந்தாய்.
ஓயாது நீளும் நம் துயருக்கும்
உனக்கான கொடூரத்துக்கும் முடிவாய்
நீதிமன்றின் ஆணை ஒலித்தது.
நண்பனே!
நீ வெளியே வந்தாய்
கம்பி வரிகளைவிட்டு நிரந்தரமாகவே.
இன்று சூரியன்
அதிகம் பிரகாசித்தொளிர்ந்தது.
இனிய பறவையின் கானத்தில்
எம் காதுகள் நிரம்பின.
துப்பாக்கி முனையில் நீ
கொழுவுண்டு போகப்பட்டபோது
அவர்களுக்கான காலமாயிருந்தது.
எம் ஆர்ப்பரிப்புக்கள், அமைதிகள்
எவையும் செயலற்று
காற்று வெளியில் வரைந்த கோடுகளாயின.
இப்போது,
நமக்கான காலமெனில்
மறுபடியும் சிறைக்கதவுக@டே
வேறும் பலர் வரக்கூடுமா?
ஞாபகன்

