07-13-2005, 09:51 PM
<span style='font-size:23pt;line-height:100%'><b>இலண்டன் குண்டுத் தாக்குதல்களுக்கு அரசின் பதில் நடவடிக்கை</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41297000/gif/_41297973_hunt_promo_203.gif' border='0' alt='user posted image'>
லண்டனில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல்களுக்கு அரசின் பதில் நடவடிக்கையை பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் வெளியிட்டு வருகிறார்.
நான்கு சந்தேக குண்டுதாரிகளில் மூவர் பிரிட்டனில் பிறந்த முஸ்லீம்கள் என்று போலிசார் அறிவித்த பின்னர் பேசிய பிளேர் , இந்த குண்டுத்தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட அரசியல் நடவடிக்கை அல்ல என்றும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி அதில் வேறுன்றி நிற்கும் ஒரு தீவிரவாத சித்தாந்தத்திலிருந்து வெளிப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த தீமை என்று அவர் வர்ணித்த ஒன்றை எப்படி எதிர்கொள்வது என்று பிரிட்டிஷ் முஸ்லீம் சமுதாயத் தலைவர்களுடன் அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று அவர் கூறினார்.
முன்னதாக பிளேர் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்க்ள் குழு ஒன்றை சந்தித்தார்.
அவர்களில் ஒருவரான ஷாஹித் மாலிக் இந்த குண்டுதாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கபடும் மூவர் வளர்ந்த நாடளுமன்றத் தொகுதியின் உறுப்பினர்.
ஷாஹித் மாலிக் பேசுகையில் இந்த குண்டுத்தாக்குதல்கள் பிரிட்டிஷ் முஸ்லீம் சமுதாயத்துக்கு ஒரு பெரும் ஆழமான சவாலைத் தோற்றுவித்துள்ளதாகவும் ஆனால் முஸ்லீம் சமுதாயம் இத்தகைய செயல்களுக்கு எதிரான போரில் முன் நிற்கும் என்றும் கூறினார்.
--------------------------------------------------------------------------------
<b>ஐந்தாவது சந்தேக நபரும் தேடப்படுகிறார்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41294000/jpg/_41294343_yorkshire_pabody203.jpg' border='0' alt='user posted image'>
தேடுதல் தொடர்கிறது
லண்டன் தற்கொலைக்குண்டு தாக்குதலில் சந்தேகநபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக நம்பப்படும் ஐந்தாவது நபர் ஒருவரை போலிசார் தீவிரமாகத் தேடிவருவதாக புலனாய்வு செய்துவரும் அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நபர் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பிபிசியின் ராணுவ மற்றும் பாதுகாப்பு செய்தியாளர் , போலிஸ் புலன்விசாரணை இன்னும் ஒரு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் ஆனால் இந்த குண்டுத்தாக்குதலை நடத்தியவர்கள் தனியாக இதைச் செய்திருப்பார்கள் எனபது சாத்தியமில்லை என்று பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுவதாகவும் கூறுகிறார்.
சந்தேக நபர்களில் ஒருவரது உறவினர் ஒருவர் லீட்ஸில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் லண்டனுக்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்டுள்ளார்.

<b>பிரசல்ஸ் மாநாட்டில் பயங்கரவாத விவகாரம் ஆராயப்படுகிறது</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050616192802eu203.jpg' border='0' alt='user posted image'>
பிரசல்ஸ்ஸில் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகள்
இதற்கிடையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் சந்திக்கிறார்கள்.
தொலைபேசி அழைப்புகள், மின்-அஞ்சல் மற்றும் டெக்ஸ்ட் செய்திகள் பற்றிய விபரங்களை தக்கவைப்பதற்கான பொதுவான விதிகளை இவ்வாண்டு இறுதிக்குள் உருவாக்கும் நோக்கில் அவற்றை இந்த சந்திப்பு விவாதிக்க உள்ளது.
தவிர, ஐரோப்பிய நாடுகள் இடையே, காவல் மற்றும் உளவுத்துறை தகவல்கள், திருடப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் பற்றிய விபரங்கள் ஆகியவற்றின் பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்தும் இவர்கள் விவாதிப்பார்கள்.</span>
BBC News