07-13-2005, 11:28 AM
depression என்று சொல்லப்படுகின்ற மனஅழுத்த நோயினால் பாதிக்கப்படுவோர் அதிகம் பேர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் எண்ணகொண்டவராய் உள்ளனர். இந்த மனஅழுத்த நோய் 10 பேரில் ஒருவருக்கு இருப்பதாக கணிப்பீடுகள் சொல்கின்றன. பொருளாதார சமூக காரணிகளும் உடல் கூற்று பரம்பரை அலகு காரணிகளும் நிர்ணயிக்கின்றன.சராசரி வாழ்வு உள்ளவர்கள் கூட ஏதாவது சிறிது வீதம் உள பிறழ் வடைந்தவர்களாக காணப்படுவார்கள் இதில் படித்தவர்கள் பெரும் கல்விமான்கள் பெரும் தலைவர்கள், அறிஞர்கள் விதிவிலக்காக மாட்டார்கள் .கல்வி பொருளாதர ரீதியில் முன்னேற்றமடைந்தாலும் உளரீதியாக ஆரோக்கியமடைந்தவர்களாக இல்லாவிட்டால் அந்த சமூகம் முன்னேற்றகரமானது கொள்ள முடியாது. so call படித்தவர்கள் கூட உயர்வு மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை தன்னைப்பற்றி தவறான பிரமை போன்ற உளநோய்களால் பீடிக்கப்பட்டு பலர் உள்ளனர். இந்த சந்தரப்பத்தில் ஒன்று நினைவுக்கு வருகிறது ஜெயகாந்தன் கதையில் வரும் ஒரு ஆசிரிய பாத்திரம் தன்னை பல பெணகள் தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொணடு ஒருவருக்கு சொல்லுவார் --என்னை six girl love பண்றாங்க சார் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை யென்று--------ஆனால் அவரை உண்மையில் யாரும் அவரை லவ் பண்றமுயற்ச்சியில் ஈடுபடவில்லை அவராக கற்பனை செய்து கொணடது இப்படி பல வகையான வித்தியாசமான சின்ன சின்ன உளப்பிறழ்வுகளுடன் சராசரி மனிதரகள் கூட வாழ்ந்து வருகிறார்கள்.உளபிறழ்வு முற்றிய நிலைய அடைந்தவர்கள் மனஅழுத்தம் முற்றிய நிலையை அடைந்தவர்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தையுடையவராகிறார்கள்

