07-12-2005, 09:15 PM
MUGATHTHAR Wrote:இது ஒரு கணக்கு பிள்ளையள்
இண்டைக்கு மட்டும் எனக்கு விடை தெரியலை உங்களில் யாருக்காவது தெரிஞ்சால் சொல்லுங்கோ என்ன. . . .
ஒருமுறை நானும் சாத்திரியும் சேர்ந்து ஆளுக்கு <b>25 ரூபா </b>போட்டு இறைச்சி வாங்கப் போனோம் கடைக்காரனும் <b>50 ரூபாக்கு </b>இறைச்சியை நிறுத்துப் போட்டான் அவனோடை கெஞ்சி கூத்தாடி <b>5ரூபாவை</b>க் குறைச்சு <b>45ரூபா</b>வை கொடுத்தேன். இறைச்சியை வெட்டித்தந்த பெடியனுக்கு டிப்ஸாக <b>2ரூபா</b>வைக் கொடுத்து விட்டு வந்தோம் மிகுதி <b>3ரூபா</b>வை ஆளுக்கு <b>1.50ஆக </b>பகிர்ந்து கொண்டோம் சரியா. . .
இப்ப என்ன பிரச்சனை எண்டால் ஒருவருக்கு செலவானது <b>25-1.50=23.50 </b>அப்ப இரண்டு பேருக்கும் <b>23.50+23.50= 47ரூபா </b>பெடியனுக்கு குடுத்தது 2ரூபா மொத்தம் <b>(47+2)=49ரூபா </b>எங்கை மிச்ச <b>1ரூபா</b> இதுதான் கணக்கு அந்த 1ரூபாவைக் கேட்டு சாத்திரி மனுசனைத் தின்னப் பாக்குது யாராவது காப்பாத்துங்களேன். . . .
<b>முகத்தார்</b>...உந்தக் கூட்டை விட்டிட்டு... தனியத் தனிய எப்பவும் எல்லாத்திலும் பணத்தை பிரிச்சு அப்பப்ப வாங்கிடுங்க...சோலி முடிஞ்சுது...
இறைச்சி வாங்கின உடன...மொத்தம் 45 ரூபாவில சாத்திரிட்ட 22.50 வாங்குங்க...இல்ல கணக்கு வையுங்க... பொடிக்கு வெட்டக் கொடுக்க 2 ரூபா எல்லா... அதில 1 ரூபா வாங்குங்க இல்ல கணக்கு வையுங்க... இப்ப செலவைக் கூட்டுங்க...22.50 + 1.00 = 23.50 ஆளுக்கு..! இருவருக்கும் சேர்த்து 47 ரூபா... பிறகு வேணும் எண்டா வாற மிச்சத்தைப் பகிருங்க... ஆளுக்கு 1.50.... கையும் கணக்கும் 50 ரூபா சரியாகிடும்...பேசாம சைக்கிளில ஏறிப் பறவுங்க வீட்ட... சாத்திரியோட மிணக்கட்டு... பொண்ணம்மாக்காட்ட வேண்டிக்கட்டப் போறியள்... இறைச்சி வேளைக்கு வெட்டிக் கொடுக்கல்லை எண்டா..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

