06-21-2003, 09:25 AM
நீ யேன் அழுகிறாய் அதற்கு?
கடலிழுத்துச் செல்லும் எனக்காகக் கலங்காதே.
துயரேதுமின்றி நதிநீரிறங்கி நீராடு நீ.
முற்றவரின் துயருக்கெல்லாம்
அழுவதே வழக்கென்றிருந்தால்
கண்ணீரில் முக்குளித்திருகுமே உலகு.
எனக்காக நீயும்
உனக்காக நானும் அழுவதெனில்
சுந்தோஸ மெங்கே தலைவிரிக்கப்போகிறது
அழுவதை நிறுத்தி
துயரிற்றிருக்கத் துணிக
நான் கடல்மீண்டு வருவனெனும் கனவிலிருக்காதே.
என்னைத் துடைத்தெறிந்து விட்டு
எழுது புதுப் பாடல்.
இந்தா மூச்சுச் திணறத் தொடங்கிறது.
வாழ்வின் இறுதிக் கணத்தின் வதை சூழ்கிறது
எனினும் வாழ்ந்த உலகெண்ணிச் சிரிப்பு வருகிறது.
பொய்புூசிய மனிதருள்ளும்
நீயிருந்தாய் மெய்யாடை தரித்து.
வசந்தம் தொலைத்த ஒற்றைமரமாய்
இருந்த என்னில் படர்ந்தாய் கொடியாய்.
எத்தனை பசிய மரங்களிருந்தன பக்கத்தில்
அத்தனையும் எறிந்துவிட்டு
பற்றிப் படர என்ன கண்டாய் என்னில்?
அடி பைத்தியக்காரி
இப்போதும் பின்தொடர்ந்து வந்து
ஏன் கையசைக்கிறாய் கரையில் நின்று?
அலையழிக்கும் மணல் எழுத்தாய்
என்னை அழித்துவிட்டுப் போ.
ஊருக்குள் புகுந்துகொள்.
உலகறியா எம் உறவை எரித்துவிட்டு
மனதில் என் நினைவு அகற்றி
நிர்மலியாக இருப்பாய் நீ
என்மீது வைத்த அன்பு உண்மையானால்.
மாலிகா
கடலிழுத்துச் செல்லும் எனக்காகக் கலங்காதே.
துயரேதுமின்றி நதிநீரிறங்கி நீராடு நீ.
முற்றவரின் துயருக்கெல்லாம்
அழுவதே வழக்கென்றிருந்தால்
கண்ணீரில் முக்குளித்திருகுமே உலகு.
எனக்காக நீயும்
உனக்காக நானும் அழுவதெனில்
சுந்தோஸ மெங்கே தலைவிரிக்கப்போகிறது
அழுவதை நிறுத்தி
துயரிற்றிருக்கத் துணிக
நான் கடல்மீண்டு வருவனெனும் கனவிலிருக்காதே.
என்னைத் துடைத்தெறிந்து விட்டு
எழுது புதுப் பாடல்.
இந்தா மூச்சுச் திணறத் தொடங்கிறது.
வாழ்வின் இறுதிக் கணத்தின் வதை சூழ்கிறது
எனினும் வாழ்ந்த உலகெண்ணிச் சிரிப்பு வருகிறது.
பொய்புூசிய மனிதருள்ளும்
நீயிருந்தாய் மெய்யாடை தரித்து.
வசந்தம் தொலைத்த ஒற்றைமரமாய்
இருந்த என்னில் படர்ந்தாய் கொடியாய்.
எத்தனை பசிய மரங்களிருந்தன பக்கத்தில்
அத்தனையும் எறிந்துவிட்டு
பற்றிப் படர என்ன கண்டாய் என்னில்?
அடி பைத்தியக்காரி
இப்போதும் பின்தொடர்ந்து வந்து
ஏன் கையசைக்கிறாய் கரையில் நின்று?
அலையழிக்கும் மணல் எழுத்தாய்
என்னை அழித்துவிட்டுப் போ.
ஊருக்குள் புகுந்துகொள்.
உலகறியா எம் உறவை எரித்துவிட்டு
மனதில் என் நினைவு அகற்றி
நிர்மலியாக இருப்பாய் நீ
என்மீது வைத்த அன்பு உண்மையானால்.
மாலிகா

