07-12-2005, 02:16 PM
இன்னொரு இந்திய அமைதிப்படை - ஆம் ஈழத்தி்ல் அல்ல நேபாளத்தில் அமைதிப்படை என்ற பெயரில் இந்தியப் படை நுழைய இருக்கிறது
இந்திய வெளியுறவுக் கொள்ளை எனும் சுயநலக்கொள்கையுடனிருக்கும் இந்திய அரசும் இந்திய உளவுப்பிரிவின் எல்லைதாண்டிய பயங்கரவாதமும் இன்னொரு விடுதலைப் போராட்டத்தை நசுக்க முற்படுகின்றன.
நேபாளம் பற்றி அறிய தினக்குரலில் வெளிவந்த கட்டுரை
ஜனநாயகப் போராட்டத்தை இணையத் தளங்களுக்கு கொண்டு சென்றிருக்கும் நேபாள ஊடகவியலாளர்கள்
நேபாளத்தில் பெப்ரவரி 01 அன்று அதிகாரத்தை வலிந்து கைப்பற்றிக்கொண்ட மன்னர் கயனேந்திரா அரச மற்றும் அரசியல் தலைவர்கள், உரிமைப் போராளிகள் ஊடகவியலாளர்கள் பலரை கைது செய்திருந்தார்.
தனது செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி ஊடகங்கள் விமர்சிப்பதை தடை செய்துள்ள மன்னர், மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வரவே தாம் அவ்வாறு செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 9 வருடங்களாக போராடி வரும் மாவோ கிளர்ச்சியாளர்களால் இதுவரை 11,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் உல்லாச பிரயாணத்துறையையும், நிதியுதவிகளை நம்பியிருந்த பொருளாதாரத்தையும் இது சின்னாபின்னமாக்கியது.
ஒரு வார காலத்திற்கு இணைய சேவை வழங்குநர்களையும் அனைத்து தொலைபேசி தொடர்புகளையும் துண்டிக்கச் செய்திருந்த மன்னரின் இச் செயல்களினால் விமான சேவைகள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.
கடந்த மாதம் நிகழ்ந்த `திடீர் அரசியல் புரட்சியை' யடுத்து நேபாளத்தில் அமுல்படுத்தப்பட்ட இறுக்கமான செய்தித் தணிக்கைப் பிடியிலிருந்து தப்பும் வழிவகையாக நேபாளிய ஊடகவியலாளர்கள், உயர்தொழில் நுட்பத்தை நாடத் தலைப்பட்டுள்ளனர். நேபாளம், உலகின் மிகவும் வறிய மற்றும் பின் தங்கிய நாடுகளிலொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்படையாக தகவல் பேசும் இணையத் தளங்கள் பரந்த வாசகர் வட்டத்தை கொண்டவை. வேகமாக வளர்ச்சியடைந்து இவை மழைக்கு முளைத்த காளான்கள் போல் ஏராளமாக தோன்றி தாராளமாக செய்திகளையும் தகவல்களையும் வாரி வழங்கி வருகின்றன. இவை செய்திமூலங்களுக்கு ஒரு மாற்றுவழியாக தொழிற்படுவதோடு பிரசார தளங்களாக செயற்படுகின்றன.
எமது வாழ்க்கைப் போராட்டமும் தப்பிப் பிழைத்தலும் அறிவுரீதியாகவும் சரி, உணர்வு ரீதியாகவும் சரி எமது சுதந்திரத்திலேயே தங்கியுள்ளது என அச்சு ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான தினேஷ் வகில் கூறுகிறார். இவர் United We Blog - WWW.blog.com.np எனும் இணைத் தளத்தை நிர்வகிப்பவராவார்.
ஒரு நடமாடும் பிணம் போல் நான் வாழ விரும்பவில்லை. ஆகவே இத்தருணங்களில் நான் ஜனநாயகமும் சுபீட்சமும் நிறைந்த நேபாளத்திற்காக போராடுகிறேன் எனப் அப்பத்திரிகையாளர் உறுதிபட கூறுகிறார்.
United We Blog போன்ற பிரபல்யமான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் இணைத் தளங்கள் மற்றும் ரேடியோ ப்ரீ நேபாள் (கீச்ஞீடிணி ஊணூஞுஞு ‡ஞுணீச்டூ) போன்ற ஆக்கியோனின் பெயர் குறிப்பிடாத ஊடகமும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் நேர்காணல்களையும் மன்னருக்கெதிரான எதிர்ப்புப்போராட்டங்கள் தொடர்பான செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. நாட்டின் பிரதானமானதும் வழமையானதுமான ஊடகத்துறையினர் செய்ய முடியாத கருமங்களை இவர்கள் சாதித்து வருகின்றனர்.
ரேடியோ ப்ரீ நேபாள் (Radio Free Nepal) யை இயக்கி வரும் அச்சு ஊடகத்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர் தாம் உண்மைகளை உள்ளவாறும் நமது சிந்தனைகளின் வழி வந்தவை மூலமும் பிரசாரம் செய்கிறோம் எனக் கூறும் அவர், நான் வாசகர்களுக்கு தெரிவிப்பது யாதெனில்,
மன்னருக்கு ஆதரவான போராட்ட பேரணிகள் இடம்பெறுகின்றன. வலிந்து கட்டாயப்படுத்தப்பட்ட பங்கேற்புகளுடன் அவை நிகழ்த்தப்படுகின்றன என்பதே அவற்றிற்கு பின்னால் உறங்கிக் கிடக்கும் உண்மைகளாகும். மேலும், மன்னருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கூட குறிப்பிடும்படியான மக்கள் பங்கேற்பு இல்லை. நாட்டில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மன்னர் தனது சர்வாதிகார போக்கிலிருந்து விலகி கீழிறங்க வேண்டும் என்பது எனது உணர்வுகளாகும் என கருத்து தெரிவித்திருந்தார்.
நேபாளிய மொழி தினசரிகளில் முன்னணி வகிக்கும் பத்திரிகையொன்றில் கலை - நாகரிக பகுதியை ஆக்கும் தினேஷ் முன்னாள் தகவல் தொழில்நுட்ப நிருபராவார். இவர் தனது சொந்த இணையத்தளமொன்றை (http://www.waglo.com.np) நடத்தி வருகிறார். தன்னுடன் பல நண்பர்களையும் சக ஊடகவியலாளர்களையும் இணைத்து 2003 இலிருந்து தனது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ள தினேஷின் United We Blog தளமானது, கயனேந்திராவின் அதிகார முற்றுகையின் பின்னர் அரசியல் தளமாக மாறியது.
ஆரம்பத்தில் அரசியல் விடயங்களை தொடுவது பற்றி தயங்கிய போதும் பின்னர் அது தொடர்பாக பிரசாரம் செய்வது என தீர்மானித்தபோது அனைவரும் சம்மதித்தனர் என தினேஷ் கூறுகிறார்.
உலகின் மிகவும் வறிய 10 நாடுகளில் நேபாளமும் ஒன்றாகும். மிகச் சொற்ப அளவினரே கணினிகளை பயன்படுத்தி வருவதோடு, அதைவிட சிறிய தொகையினரே இப்பிரசார இணையத் தளங்கள் பற்றி அறிந்து வைத்துள்ளனர்.
உலகம் நேபாளம் பற்றி அறியவேண்டும். நேபாளம் பற்றி பேசவேண்டும். அதன் மூலம் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட மன்னர் கயனேந்திராவிற்கும் மேலும் அதிகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என ரேடியோ ப்ரீ நோபாள் (Radio Free Nepal) கூறுகிறது.
கைது செய்யப்படலாம் எனும் அச்சம் காரணமாக ரேடியோ ப்ரீ நேபாள் (Radio ree Nepal) பிரசார நிருபர் வெளிநாடொன்றிலுள்ள தனது நண்பருக்கு மின்னஞ்சல் மூலம் தனது செய்திகளை அனுப்ப, அந்நண்பர் இணையத்தளத்திற்கு செய்திகளை சேர்த்துக் கொள்கிறார். ஆனால், தினேஷ் வகிலும் அவரின் கூட்டாளிகளும் சுதந்திரமாக, வெளிப்படையாக இயங்கி வருகின்றனர்.
ஒரு வார காலத்திற்கு தடை செய்யப்பட்ட இணையத்தள சேவைகளும் தொலைபேசி தொடர்புகள் மீண்டும் இணைக்கப்பட்ட போதும் மாவோயிஸ்டுகளின் தளங்கள் http://WWW.newslook.com, http://WWW.nepalipost. com போன்ற செய்தித்தளங்கள் உட்பட சில இணையத்தளங்கள் இன்னும் தடைப்பட்டே காணப்படுகின்றன.
இது பற்றி அதிகம் கவலை கொள்ளாத தினேஷ், நமது அரசாங்கம் இணையத்திற்கு புதியவர்கள், மேலும் சீனாவைப் போன்று உயர்தொழில் நுட்ப ரீதியான நுணுக்கமான கண்காணிப்பு வசதிகளோ ஆற்றல்களோ இவர்களிடம் இல்லை. அவர்கள் எமது தளங்களை பார்வையிடுகிறார்கள் என்பதும் சந்தேகமே என விவரம் கூறுகிறார்