06-21-2003, 09:25 AM
நேற்றுத்தான் நாமங்கே...
நேற்றுத்தான் நாமங்கே நெஞ்சுநிறை ஆசையோடு
போற்றிப் பாதுகாத்த பொன் மண்ணைப் பார்க்கவென்று
வேற்று முகங்கடந்து வெறிச்சோடும் தெருக்கடந்து
காற்றின் முகங்கூட கருகி மறைந்திருக்கும்
மாற்றம் பலகொண்டு மகிழ்விழந்து குலைந்திருக்கும்
ஏற்றங் கொண்டிருந்த எம்மண்ணுக் கேகியதில்
சீற்றம் பொங்கிச் சிதைந்து மனமழியத்
தோற்றம் இழிந்த சொந்த மண் கண்டு சொல்-
தொலைந்தோம்.
அன்றொருநாள் அழகான தார்வீதி தானோட
தென்னையிளங் கன்றெல்லாம் தலையாட்டி விடைகூற
என்றும் ஒளியிழக்கா இயற்கை அழகுகளைத்
தென்றல் தழுவத் திசையெங்கும் குளிர்த்திவிட
முற்றத்தில் முழதாக மண்விளைவு கண்ணிறைக்க
கன்றுக்கூட்டங்களும் காமதேனுப் பசுக்களுமாய்
வென்று கொடி நாட்டும் விளைச்சல் வயல் காட்டியதே
இன்றிதெல்லாம் தின்றபோர் சென்றொழிந்து போனதம்மா
சேர்ந்தோம்.
குந்தி இருப்பதும் குறிப்புத் தொலைந்ததென்று
வந்த நடைசுருக்கி வழிகூர்ந்து பார்ப்பதும்
மந்திக் கணங்கள் மரம் விட்டுத் தாவுதல் போல
வெந்த மனம்மாறி வீதிவழி நடப்பதுவும்
இந்த நிலையின்று எமக்கேனென ஏங்குவதும்
நிந்திக்க யாரென்று நிதம் நம்மை நோக்குவதும்
சொந்தமாய்த் தென்மராட்சி கொண்டோர் சோகமடா
அந்தரந்தான். ஆனாலும அனாலும அனுபவித தே ஆகவேணும நடந்தோம்.
தட்டியெழுப்பித் தலைகொஞ்சம் தான்கொண்டு
கொட்டம் அடித்த யுத்தமதில் குலைந்தழுது
பெட்டி ஒன்றிரண்டு பிடித்த உயிர் கையோடு
எட்டி வைத்த காலதிலே எழுந்தோடி மீண்டுவர
மட்டுப் பாடான உழைப்புள்ளும் மனம்வைத்துக்
கட்டி முடித்த மனை குறுங்கல்லாய்க் காலடியில்
தட்டித் தானழிந்த சேதியதைச் சொல்லிவிட
முட்டிப் பெருகி முழநிலமும் நனையக் கண்ணீர்
வடித்தோம்.
கூடிச் சிறுகொடியே கொம்பரெங்கும் புூச்சுமந்து
ஆடி அசைந்து மண்ணை அழகாக்கத் துடிக்கையிலே
பாடித் திரிந்த மண்ணும் பாழடைந்து போனதென்று
வாடிப் போய்ச் சோர்ந்து வேறிடத்தில் வாழ்ந்திருக்க
ஓடிப்போவோமா? இல்லை எங்கள் மண்ணை
மூடிச் சூழ்ந்துவந்த இழப்பெல்லாம் மீட்பமென்று
நாடி வந்து நாமெல்லாம் நன்றே சோh ந்துழைத்து
தேடியொரு பொற்றகாலம் திசை புகழச் செய்யோமோ
செய்வோம்.
ச.சாரங்கா