Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டெஸ்மன் டூட்டூ
#1
இடைக்கால நிர்வாகசகை தொடர்பான புலிகளின் வரவை இறுதிசெய்யும் அயர்லாந்துக் கூட்டம் ஆரம்பமானது

வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக புலிகள் சமர்ப்பிக்கவிருக்கும் திட்டத்தை இறுதி செய்வதற்கான கலந்துரையாடல் நேற்றுக்காலை அயர்லாந்தில் நல்லிணக்கத்துக்கான கிளன்கிறீ நிலை யத்தில் ஆரம்பமானது.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் சட்ட மற்றும் அரசமைப்பு நிபுணர்களும் அங்கு ஒன்றுகூடி இடைக்கால நிர்வாகம் தொடர்பான புலிகளின் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கலந்துரையாடல் நடைபெறும் நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி இயன் வைற்றும், திட்ட இணைப்பாளர் சீன் ஓ பொயிலும், அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் குழுவை வரவேற்றனர். தங்கள் நிலையம் குறித்தும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அவர்கள் ஆரம்ப நிகழ்வில் சிறிய விளக்கம் ஒன்றை அளித்தனர். அதைத் தொடர்ந்து புலிகளின் அரசமைப்பு விவகாரக்குழு அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் இடைக்கால நிர்வாகத் திட்டம் தொடர்பான ஆராய்வை ஆரம்பித்தது.
இக்கலந்துரையாடலில் புலிகளின் மட்டு - அம்பாறை விசேடதளபதி கேணல் கருணா, சட்டநிபுணர்களான உருத்திரகுமாரன், இலங்கையின் முன்னாள் சட்டமாஅதிபர் சிவா பசுபதி, பேராசிரியர் போல் டொமினிக், பேராசிரியர் இராமசாமி, வழக்கறிஞர் இந்திரன் மற்றும் ஷிரான் பணிப்பாளர் இரேனியஸ் செல்வின், விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலணிச்செயலர் புலித்தேவன், பொருளியல் நிபுணர் ஜோய் மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சில தினங்கள் நடைபெறும் இக்கலந்துரையாடலை முடித்துக்கொண்டு எதிர்வரும் 11ஆம் திகதி புலிகளின் குழுவினர் வன்னி திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் இம்மாத நடுப்பகுதியில் இடைக்கால நிர்வாகம் பற்றிய தமது இறுதித்திட்ட வரைவை நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாக இலங்கை அரசுக்கு புலிகள் அனுப்பிவைப்பர் என எதிர்பார்க்கப் படுகின்றது.
http://www.uthayan.com/news/newsmain.htm

கடைசியாக வந்த செய்திகளின்படி சுகயீனம் காரணமாக..? நெல்சன் மண்டேலா கலந்துகெகாள்ளமாட்டாரெனவும் அவருக்குப் பதிலாக அவரது பிரதிநிதியாக டாக்கர் டெஸ்மன் டூட்டூ கலந்துகொள்வாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி
Truth 'll prevail
Reply


Messages In This Thread
டெஸ்மன் டூட்டூ - by Mathivathanan - 10-07-2003, 07:43 AM
[No subject] - by yarl - 10-10-2003, 09:52 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 10:16 PM
[No subject] - by AJeevan - 10-10-2003, 10:31 PM
[No subject] - by Kanani - 10-10-2003, 10:53 PM
[No subject] - by AJeevan - 10-11-2003, 09:17 AM
[No subject] - by P.S.Seelan - 10-13-2003, 12:41 PM
[No subject] - by Kanani - 10-13-2003, 12:54 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 05:54 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 07:23 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 05:12 AM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:54 PM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)