10-07-2003, 06:41 AM
நட்பு காதல் நல்ல தலைப்பு. நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. இப்படி ஓர் தலைப்பில் எழுத தொடங்கியிருக்கும் இளைஞனை மனந்திறந்து பாராட்டலாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு அன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பார்வையுடன்தான் உற்று நோக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில்....அதன் பார்வை சற்றே திசை திரும்பியிருக்கிறது என்பதே என் கருத்து.
இளைய தலைமுறையினர் ஆண் பெண் பழகும் முறையை காதல் என்ற போர்வைக்குள் மூடிவிட முடியாது. படிப்பு, internet, இன்னும் பல பல விடயங்களில் காதல் என்று நாம் பெற்றோர்களாகிய நாம் முடிவு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்.... அவை இளம் வயதினரின் மனதில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதை தவிர பொது இடங்களில் எம் இளைய தலைமுறையினர் நட்புடன் உரையாடும்போது கூட ......அதை தவறான கண்ணேட்டத்தில் உற்று நோக்கி உரையாடியதையும் என் காதுபடவே கேட்டும் இருக்கிறேன். இதிலிருந்து எம் சமூகம் முழுமையாக இதிலிருந்து மாறிவிட்டது என்று ஒப்புக்கொள்ள முடியாது.
இறுதியாக ஒன்று எம் இளைய தலைமுறையினரின் நடைமுறை வாழ்க்கை..... மனநிலை ஆகியவற்றை நாம் ஒரளவுக்கு ஆவது புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் என கேட்டுக் கொள்கிறேன்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.