06-21-2003, 09:24 AM
ஒரு பிசாசின் மரணம்
கால இருளைக் குடைந்து கொண்டு வருகிறது
குதிரைகளின் குளம் பொலியடங்காக்
காற்று
அதோ!
சப்பாத்துக் காலடிகளின் ஓசை
இருளின் கூந்தலைப் பிடித்திழுக்கிறது
மீண்டும், மீண்டும்
முதுகில் கூனல்
நிமிர, நிமிர உதைக்கிறார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள்
குருதிப் புனலாடவும் இங்கே வந்து
போகிறார்கள்
கூந்தல் கலைய
எமது பெண்கள்
விம்மியழுதவை
காலங்கடந்தும் எமது
உயிரணுக்களிலும் அதிர்கிறது
ஆக்கிரமிப்பாளர்களின் குதிரைகள்
எமது இதய நாடிநரம்புகள் ஊடாகவும்
சவாரி செய்யுமோசை இன்னும் தான் கேட்கின்றது.
ஒளியின் பிடரி பற்றி வீரர்கள்
குதிரையேறத் தொடங்கிய பிறகு தான்
கதையே மாறிற்று
மூதாதையர்களின் கைப்பட
பேரப்பிள்ளைகளுக்கும் புூட்டப் பிள்ளைகளுக்கும்
பிறருக்கும், நிழலும், கனியும் கொடுக்கவென
நாட்டிய முது மரங்களின் நிழலில் ஒதுங்கிக்களைப்பாறினர்
நீண்ட பயணங்களின் பின்
காடுகளின் இரகசியங்களுக்குள்
ஆழமாய் ஊடுருவிப் போயினர்
எனது மண்
என்ற பிரகடனங்களுடன்
வாழ்வைச் சூறையாடிய
ஆக்கிரமிப்புப் பிசாசுகள் சிலதையும்,
துப்பாக்கிகளையும், தொப்பிகளையும், சப்பாத்துக்களையும்
கிராமங்கள் ஊடாக பிசாசின் மரண ஊர்வலமாக எடுத்துப் போயினர்
பிசாசின் மரணத்தை எழுதத் தொடங்கிய
வரலாற்றின் தொடக்கமே
வாழ்க்கைக்கான புதிய திறவுகோல் எனின்
அதற்காக வாழ்ந்தவர்கள்
எப்போது இறந்து போவார்கள் ?
கால இருளைக் குடைந்து கொண்டு வருகிறது
குதிரைகளின் குளம் பொலியடங்காக்
காற்று
அதோ!
சப்பாத்துக் காலடிகளின் ஓசை
இருளின் கூந்தலைப் பிடித்திழுக்கிறது
மீண்டும், மீண்டும்
முதுகில் கூனல்
நிமிர, நிமிர உதைக்கிறார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள்
குருதிப் புனலாடவும் இங்கே வந்து
போகிறார்கள்
கூந்தல் கலைய
எமது பெண்கள்
விம்மியழுதவை
காலங்கடந்தும் எமது
உயிரணுக்களிலும் அதிர்கிறது
ஆக்கிரமிப்பாளர்களின் குதிரைகள்
எமது இதய நாடிநரம்புகள் ஊடாகவும்
சவாரி செய்யுமோசை இன்னும் தான் கேட்கின்றது.
ஒளியின் பிடரி பற்றி வீரர்கள்
குதிரையேறத் தொடங்கிய பிறகு தான்
கதையே மாறிற்று
மூதாதையர்களின் கைப்பட
பேரப்பிள்ளைகளுக்கும் புூட்டப் பிள்ளைகளுக்கும்
பிறருக்கும், நிழலும், கனியும் கொடுக்கவென
நாட்டிய முது மரங்களின் நிழலில் ஒதுங்கிக்களைப்பாறினர்
நீண்ட பயணங்களின் பின்
காடுகளின் இரகசியங்களுக்குள்
ஆழமாய் ஊடுருவிப் போயினர்
எனது மண்
என்ற பிரகடனங்களுடன்
வாழ்வைச் சூறையாடிய
ஆக்கிரமிப்புப் பிசாசுகள் சிலதையும்,
துப்பாக்கிகளையும், தொப்பிகளையும், சப்பாத்துக்களையும்
கிராமங்கள் ஊடாக பிசாசின் மரண ஊர்வலமாக எடுத்துப் போயினர்
பிசாசின் மரணத்தை எழுதத் தொடங்கிய
வரலாற்றின் தொடக்கமே
வாழ்க்கைக்கான புதிய திறவுகோல் எனின்
அதற்காக வாழ்ந்தவர்கள்
எப்போது இறந்து போவார்கள் ?

