Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுமிகள் மீட்பு
#5
<span style='font-size:21pt;line-height:100%'>மாணவிகள் மீது வல்லுறவு - பொலீஸாரினால் மூவர் கைது! </span>வவுனியா மகாரம்பைக் குளத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி காணாமற்போன இந்த இரு மாணவிகளும் பன்குளம் என்ற இடத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த மாணவிகள் பொலீஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று நபர்களைப் பொலீஸார் கைது செய்து வவுனியா நீதிவான் எம் இளஞ்செழியன் முன் ஆஜர் செய்தனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூவரையும் விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட இரு மாணவிகளையும் அநுராதபுரம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் பொலீஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 10-06-2003, 08:58 AM
[No subject] - by Mathivathanan - 10-06-2003, 10:07 AM
[No subject] - by Paranee - 10-06-2003, 01:09 PM
[No subject] - by Mathivathanan - 10-07-2003, 02:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)