Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெட்டியா இருந்தா டயல் பண்ணு
#1
ஒரு பிரபல சானலின் "வெட்டியா இருந்தா டயல் பண்ணு' புரோகிராம்ல நேயர்கள் கேட்குற பாட்டைப் போடுறதுக்காக "காம்பியர்' அவதாரம் எடுக்குறாங்க வடிவேலுவும், விவேக்கும்! திடீர்னு பிரபலங்கள் லைன்ல வந்து பாட்டுக் கேட்க, கும்மாளம் கூத்தாடுது!


வடிவேலு: ஹலோ... "வெட்டியா இருந்தா டயல் பண்ணு'. யார் பேசறது?

எதிர்முனை: நீதான் பேசற!

வடிவேலு: ஹலோ... யார் பேசறது?

எதிர்முனை: நீதான் பேசற!

வடிவேலு: ஆஹா... வந்துட்டான்யா... வந்துட்டான்ய்யா..!

விவேக்: ஆஹா... குடைச்சல் கொடுக்குற வைகைப் பார்ட்டிய, குடைச்சல் கொடுக்க வந்த "குடைக்குள் மழை' குசும்பனே வருக! வருக!

பார்த்திபன்: நீயும் ரொம்பப் பேசற... உனக்கும் நான் "சொல்லி அடிப்பேன்' கில்லி!

வடிவேலு: என்ன பாட்டு வேணும்?

பார்த்திபன்: கந்த சஷ்டி கவசம்!

வடிவேலு: இந்த எகத்தாளம்தான வேணாங்கறது! என்ன சினிமாப் பாட்டு வேணும்?

பார்த்திபன்: தமிழ் சினிமாப் பாட்டு!

வடிவேலு: ஏன்யா பாடாப்படுத்துற!

பார்த்திபன்: பைப்ல தண்ணி வரல. ஸ்டாப்ல பஸ்சு வரல. ஆஸ்பத்திரிக்கு நர்சு வரல. சட்டசபைக்கு எதிர்க்கட்சி வரல. காலைல பேப்பர் வரல. கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு வாத்தியார் வரல. சாப்பிட்டதுக்கு அப்புறம் ஏப்பம் வரல... இத்தனை "வரல' இருக்கறப்போ, நான் கேட்டு நீ போடுற பாட்டு வரலன்னு யாராவது கவலைப்படப் போறாங்களா?

வடிவேலு: ஆவ்வ்வ்... (அழுகிறார்)

பார்த்திபன்: என் கேள்விக்கு இன்னும் பதில் வரல!

விவேக்: (லைனைக் கட் செய்துவிட்டு) இவரு எழுதினா அது கிறுக்கல்! இவரு பேசுனா அது "நறுக்'கல்! ஒருக்காலும் இவரு பாட்டைக் கேட்டுக்க மாட்டாரு... இருந்தாலும் மறுக்காம நாங்க போடுறோம் "திருப்பாச்சி' பாட்டு!


விவேக்: நெக்ஸ்ட் காலர் லைன்ல வாராரு... யாருன்னு பாப்போம்! ஹலோ...

எதிர்முனை: ஹாய்... மந்த்ரா பேடி ஹியர்...

விவேக்: ஆத்தாடி... மந்த்ரா பேடியா? என் பாடி ஹாட் ஆகுது. நாடி ஹீட் ஆகுது. வாய்ல ஓடிக்கிட்டிருந்த வார்த்தையெல்லாம் ஆடித் தள்ளுபடியில காணாமப் போயிடுச்சே... நான் என்னத்தப் பேசுவேன்...

மந்த்ரா: நல்லாப் பேசுறீங்க!

விவேக்: நல்லாத்தான் பேசிக்கிட்டிருந்தேன். நீங்க போன்ல போட்ட "பவுலிங்'லயே நான் "அவுட்'! இனிமே ஒழுங்காப் பேசமுடியுமாங்கறதே "டவுட்'!

வடிவேலு: யாரு...? கிரிக்கெட்டு நடக்கறப்போ கெக்கபிக்கன்னு இங்கிலிபீசுல இஸ்கோரை சொல்லுமே, அந்தப் புள்ளயா பேசுது... ஆமா... கிரிக்கெட்ல எதுவரைக்கும் படிச்சிருக்கீக? பி.காமா? எம்.காமா?

விவேக்: ஆங்... இண்டிகாம்!

மந்த்ரா: எனக்குப் பாட்டு வேணும்!

விவேக்: என்ன பாட்டு? கோழி குத்தாட்டம் போட்ட மாதிரி, மன்மதன்ல சிம்புகூட அம்பு வுட்டீங்களே... அந்தப் பாட்டா? நான்கூட ஹீரோதான். என் படத்துலயும் "சிங்கிள்' டான்ஸ்க்கு "மிங்கிள்'ஆகி ஆட வர்றீங்களா? "அங்கிள்'கிட்ட, அதான் உங்க ஹஸ்பெண்ட்கிட்ட கேட்கணுமா?

வடிவேலு: கூரை ஏறி கோழி புடிக்கத் தெரியாதவன் ஊரைத்தாண்டி ஊர்கோலம் போக ஆசைப்பட்டானாம். நம்ம பார்ட்னர் இப்படித்தான், பார்ட்டைமா உளறிக்கிட்டிருப்பாரு. நீ என்ன பாட்டு வேணும்னு கேளு தாயி!

மந்த்ரா: டெண்டுல்கர் நடிச்ச படத்துலயிருந்து..!

வடிவேலு: இந்திப் பாட்டா?

மந்த்ரா: இல்ல மேன்... மூவி... சச்சின்!

விவேக்: வாடி... வாடி... வாடி... வாடி... நீ மந்த்ரா பேடி...

நீ ஸ்கோரு சொல்லும் நேரத்துல

நெஞ்சில் போரு மூளுதேடி!

(விவேக் பாட... பாடல் தொடர்கிறது)


வடிவேலு: வெல்கம் பேக் டூ "வெட்டியா இருந்தா டயல் பண்ணு! ஹலோ... லைன்ல யாரு?

எதிர்முனை: நீ தமிழன்தானே! தமிழில் பேசு, பதில் சொல்றேன்!

வடிவேலு: (மனதிற்குள்: ஆஹா... நமக்கு வர்றவைங்க எல்லாம் வம்பு பண்ணுறதுக்குன்னே வர்றானுங்க) ஆங்... வணக்கமுங்க. ஆரு நீங்க?

விவேக்: குரலைக் கேட்டாத் தெரியலையா... இதுக்கு மேல நீ ஆங்கிலம் பேசுனா ஏற்கனவே கரி எஞ்சின் மாதிரி இருக்குற உன் வாய்ல தாரைக் கோரி ஊத்திட்டுப் போயிடுவாரு.

இராமதாசு: நான் தமிழ்க் குடிதாங்கி. சமூகத்தின் இடிதாங்கி.

விவேக்: ஆங்கிலத்தின் தலை வாங்கி. போராட்டக் களத்தில் ராணுவ டாங்கி!

வடிவேலு: அய்யா... உங்களுக்கு என்ன பாட்டுப் போட? மும்பை எக்சுபிரசு, த்ரீ ரோஸஸ், 4 ஸ்டூடன்ஸ், பைவ் ஸ்டாரு எதுனாச்சும் போடவா?

இராமதாசு: நீ தமிழினத் துரோகியா? உனக்குத் தமிழ்ப் படங்களே தெரியாதா? இல்லை என்னைப் பற்றித் தெரியாதா?

வடிவேலு: (மனதிற்குள்: ஆஹா... எக்குத்தப்பா கேட்டுப் புட்டோமோ!) ஆங்... அய்யா மன்னிச்சுப்புடுங்க. நீங்களே ஒரு நல்ல புதுத் தமிழ்ப் பாட்டாக் கேளுங்க!

இராமதாசு: ஆங்கில வார்த்தைகளின்றி, சமஸ்கிருத எழுத்துகள் இன்றி, முனகல் இன்றி, தெளிவான உச்சரிப்புள்ள பாட்டு ஒன்று போடு. அதில் தமிழ் பேசும் நடிகன், நடிகை ஆட வேண்டும். இது என் கட்டளை.

விவேக்: சரிய்யா... நாங்க "குருதிப்புனல்'ல இருந்து ஒரு "குத்து' சாங் போடுறோம். (லைனைக் கட் செய்துவிட்டு) இவரு கேட்குற பாட்டை இனிமேதான் இட்லி கொப்பரைக்குள்ள வைச்சு, இனிமேதான் அவிக்கணும். நேயர்களே... நீங்க கவலைப்படாதீங்க. அவருக்குப் பிடிச்ச மாதிரி... நீங்களும் ரசிக்கிற மாதிரி ஒரு சாங் வந்துக்கிட்டே இருக்கு!

(மாம்பழமாம்... மாம்பழம்! மல்கோவா மாம்பழம்... ரைம்ஸ் ஒலிக்க ஆம்பிக்கிறது)


விவேக்: நிகழ்ச்சியோட லாஸ்ட் காலர் யாருன்னு பாப்போம்!

வடிவேலு: ஹலோஓஓ...

எதிர்முனை: ஹலோ... கோவிந்தா ஏஜென்சியா... ரெண்டு வண்டி மண்ணை அனுப்புங்க. ஒரு லோடு ஜல்லி அனுப்புங்க. அட்ரûஸக் குறிச்சுக்கோங்க. நம்பர் தொன்னூத்தியெட்டு...

வடிவேலு: ஏய்... ஏய்... என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு. மருவாதையா பாட்டை மட்டும் கேளு!

எதிர்முனை: ஏம்ப்பா... மொதலாளி இல்லையா... கடைக்காரப் பையனா நீ..?

விவேக்: எஸ்... மொதலாளி ஸ்பீக்கிங்...

எதிர்முனை: என்னய்யா இங்கீலிசு... மொகரக் கட்டை! மண்ணு அனுப்புவியா, மாட்டியா?

விவேக்: டேய்... ஜல்லி கேட்குற மில்லி பார்ட்டி... ரெண்டு நம்பரைத் "தள்ளி', ராங்கா டயல் பண்ணிட்டு ஏண்டா உன் "கொள்ளி' வாயால "கொழப்பம்' பண்ற. லைனைக் கட் பண்றா பிஸ்கோத்து!

வடிவேலு: கடைசியா "வூடு' கட்டிப் பேசுன மேஸ்திரிக்காக அவரு கேட்காத சாங்கை மத்த மேஸ்திரிகளுக்கெல்லாம் டெடிகேட் பண்றோம்!

(சின்ன வீடா வரட்டுமா.... பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது.)

Thanks: Dinamani
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
வெட்டியா இருந்தா டயல் பண்ணு - by SUNDHAL - 07-11-2005, 09:42 AM
[No subject] - by Mathan - 07-11-2005, 09:46 AM
[No subject] - by kuruvikal - 07-11-2005, 09:51 AM
[No subject] - by அனிதா - 07-11-2005, 10:07 AM
[No subject] - by Danklas - 07-11-2005, 10:10 AM
[No subject] - by kavithan - 07-11-2005, 06:29 PM
[No subject] - by shanmuhi - 07-11-2005, 06:36 PM
[No subject] - by lankan - 07-12-2005, 04:21 AM
[No subject] - by Niththila - 07-12-2005, 07:22 AM
[No subject] - by வெண்ணிலா - 07-12-2005, 12:46 PM
[No subject] - by tamilini - 07-12-2005, 02:42 PM
[No subject] - by sinnappu - 07-12-2005, 02:44 PM
[No subject] - by tamilini - 07-12-2005, 02:47 PM
[No subject] - by sathiri - 07-12-2005, 02:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)