07-10-2005, 10:49 PM
முதலிலை இந்தத் தலைப்பே தவறு. தமிழ் சிறார்மட்டுமன்றி எந்த ஒரு குழந்தைக்கும் அக்குழந்தை எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழிக் கல்வியென்பது அவர்களது வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்பது உளவியல் வல்லுனர்களினால் கண்டறியப்பட்டு பலநாட்டு அரசுகளினாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கிறதாலைதான் நாங்கள் வாழும் புலம் பெயர் நாடுகளிலையும் எம்மவர் சிறார்களின் தமிழ் மொழிக் கல்விக்கு இந்நாட்டு அரசுகளால் பலவித உதவிகளும் ஊக்குவிப்புகளும் கொடுக்கப்படுகிறது. ஆனபடியால் தமிழ் கல்வி அவசியமா என்பதைவிட்டு தமிழ் கல்வியை எவ்விதம் இலகுவில் குழந்தைகள் விரும்பும் விதத்தில் அவர்களுக்குக் கொடுக்கலாம் என்ற பாதையில் விவாதிப்பது சிறந்ததென நினைக்கிறன்.
10 வருடங்களாக எங்கட தமிழ் குழந்தையளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறவன் என்ற முறையில் சில விசயங்களைச் சொல்லுறன். நான் இருக்கிற ஜேர்மனியைப் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 75 வீதத்துக்கும் அதிகமான எங்கட சிறுவர் 120க்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் மூலம் தமிழ் படிக்கினம். இவர்களின்றை தமிழ் அறிவும் அவர்கள் தமிழ்மொழி பாவனையும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலுள்ள நம்மவர் குழந்தைகளைவிட தரத்தில் சிறந்ததாகவே உள்ளது. ஆரம்பகாலங்களில் ஈழத்தில் பாவளையிலுள்ள அதே பாடப்புத்தகங்களே இங்கும் பாவிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்நிலை மாறி நவீன கற்பித்தல் முறைகளுடனான புலம்பெயர் சிறார் இரண்டாவது மொழியாகத் தமிழை இலகுவில் கற்பதற்குரிய புத்தகங்கள் பாவனைக்கு வந்துவிட்டன. இவற்றின்மூலம் பார்த்தல அல்லது வாசித்தல், கேட்டல், எழுதுதல் ஆகிய மூன்று வழிகளிலும் குழந்தைகள் கல்வி நெறிப்படுத்தப்படுகிறது. இந்தப்புத்தகங்களும் இவற்றின் இணைப்புக்களாக சிறுவகுப்புக்களில் கற்கும் குழந்தைகள் கேட்டற்குரிய ஒலி இறுவெட்டுக்களும் அவர்களை ஓரளவுக்கு விருப்புடன் தமிழ் கற்க உதவுகின்றன.
ஆலையில்லாத ஊரிலை இலுப்பம்புூ சக்கரையாம் என்றதுபோல புலம்பெயர் நாடுகளிலை தமிழைப் போதிக்க தகைமையுடைய ஆசிரியர்கள் இல்லாததாலை இருக்கி மற்றவை அந்த இடத்தை நிரப்ப முற்படுவது பெரும் இடையுூறாக உள்ளதுடன் பல பின்னடைவுகளையும் தருகிறது என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. இவர்களிடம் போதிய தமிழறிவு இல்லாததுமட்டுமன்றி காலவதியாகிப்போன பழைய கற்பித்தல் முறைகளும் மாணவர்களைக் கையாளும்விதங்களும் சிறார்கள் மத்தியில் தமிழ் மீதான ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது. ஒருகாலத்திலை குருகுலமுறையில் குரு சிஸ்யன் கற்பித்தல்முறை இருந்தது. பின்பு ஆசிரியர் மாணவர் என்ற முறை வந்தது. இன்றைய காலத்துக்கு அதுகூட தவறென்று சொல்ல வேணும். தங்களிடம் இல்லாத ஒன்றைத் தேடுபவர்களும் அவர்களுக்குpரிய சரியான பாதையைக் காட்டும் வழிகாட்டி என்பதுவுமே பொருத்தமானதென நினைக்கிறன். நான் பெரும்பாலும் 7 வகுப்புக்கு மேற்பட்ட சிறார் என்பதைவிட இளைஞர்களுக்குத்தான் தமிழ் அறிவுூட்டுகிறேன். எனது வகுப்பிலை ஆசிரியர் மாணவர் என்ற நிலையை தாண்டி நட்புரீதியல்தான் பிள்ளைகள் படிக்கினம். பாடப்பத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு படிக்காமல் அவர்களுக்கு ஈடுபாடுள்ள கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள், சினிமா, பாடல்கள், கவிதை இப்படிப் பலதையும் எடுத்துக் கையாண்டு அவற்றினு}டாக தமிழை ஈடுபாட்டுடன் தேடத் து}ண்டப்படுகிறார்கள். இதனாலை தாங்கள் படிக்கிறதென்று தெரியாமலே அவர்கள் படிக்கிறார்கள். நான் பரீட்சித்தவரையில் இது நல்லபலனையே தந்திருக்கிறது. உதாரணத்திற்கு இன்று என்னிடம் எட்டாம் வகுப்பில் கல்விகற்கும் ஆறுமாணவர்களும் கிட்டத்தட்ட 3ஆண்டுகளுக்குமுன் 5வகுப்பில் என்னுடன் இணையும்போது இவர்களது தமிழ் பரீட்சைப் பெறுபேறுகள் தரம் 3, 4 என்றளவில் இருந்து அடுத்தவகுப்பில்அவர்களதுபெறுபேறுகள் தரம் 2,3 என்ற அளவிற்கு வந்து கடைசியாக இரண்டுமாதங்களுக்கு முன் நடந்த பரீட்சையில் ஏழாம் வகுப்பில் கல்விகற்ற ஆறுவரில் 4 மாணவர்கள் 1தரத்தில் சித்தியடையுமளவிற்கு அவர்களது கல்வித்தரம் உயர்ந்தது பெரு மகிழ்ச்சியாக இருக்கு. இதை இப்ப நான் பந்தாவுக்காகச் சொல்லவரேல்லை இதைப்படிக்கிறவையளிலை தமிழாசான்கள் இருந்தால் தயவுசெய்து அவையளும் இதுமாதிரியான அல்லது இதைவிடச் சிறந்த உத்திகளைத் தேடி பிள்ளைகளை ஈடுபாட்டுடன் படிக்க வழிகாட்டுங்கோ அப்பதான் தமிழ் வாழும்.