Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவோ போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி
#5
<span style='font-size:30pt;line-height:100%'>மனித வெடிகுண்டு தாக்குதல்: நேபாள தீவிரவாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பயிற்சி </span>

காட்மாண்டு, ஜுலை. 10-

நேபாளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மன்னர் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். தீவிரவாதிகளுக்கும் நேபாள ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீவிரவாதிகள் மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் நேபாளத்தின் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு இலங்கையின் விடுதலைப்புலிகள் ரகசிய பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவது எப்படி? வெடிகுண்டுகளை கையாள் வது எப்படி? என்பது குறித்து விடுதலைப்புலிகள் நேபாள தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். நேபாள எல்லையில் ரகசிய இடத்தில் இந்த பயிற்சி முகாம்கள் உள்ளன.

இந்தியாவில் பீகார் மாநிலத்திலும் இந்த ரகசிய பயிற்சி முகாம்கள் இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திகையில் கூறப்பட்டுள்ளது.

சிறுவர் சிறுமிகளையும் இந்த பயிற்சியில் அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள். சயனைடு மாத்திரைகளை எப்போதும் ரகசியமாக வைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே அசாமில் உள்ள உல்பா தீவிரவாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர்.

நேபாள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பிரான்சு நாட்டை சேர்ந்த ஒரு இயக்கத் தினரிடம் இருந்தும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

Maalimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 07:04 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 07:07 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 08:17 PM
[No subject] - by வினித் - 07-10-2005, 08:47 PM
[No subject] - by ஈழத்துளி - 07-12-2005, 01:37 PM
[No subject] - by ஈழத்துளி - 07-12-2005, 02:16 PM
[No subject] - by Vaanampaadi - 07-12-2005, 03:44 PM
[No subject] - by Vaanampaadi - 07-12-2005, 03:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)