Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவோ போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி
#1
[size=18]நேபாளத்தின் மாவோ போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி

இணைய சஞ்சிகை தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் நேபாளத்தின் மாவோ போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியளித்து வருவதாக வாஷிங்டனிலிருந்து வெளியாகும் இணைய சஞ்சிகையொன்று தெரிவித்துள்ளது.

சவுத் டிரிபியுன் எனும் இணைய சஞ்சிகையே இவ்வாறு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் நர்கட்டியாகன்றி எனும் பகுதியில் பயிற்சி முகாமொன்றை நடத்துவதாகவும், மாவோ போராளிகளுக்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை எவ்வாறு மேற்கொள்வது என்ற பயிற்சியை அளித்து வருவதாகவும் இணைய சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இந்தப் படையணிகளுக்கு பெண்களும் இளைஞர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் தம்முடன் சையனைட் வில்லைகளை வைத்திருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவோ தலைவர் ஒருவருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலை அடிப்படையாக வைத்தே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்ட ஒரு மாவோ தலைவர் இதனை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவோ போராளிகளின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பாபுராம் பட்டார்ச்சார்யாவே புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் அவர் இந்திய, நேபாள அரசியல் தலைவர்களை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் விசேட பிரதிநிதியொருவரும் கலந்து கொண்டுள்ள இந்த இரகசிய சந்திப்பில், விடுதலைப் புலிகள் நேபாள மாவோ போராளிகளுக்கும் இந்திய மாவோக்களுக்கும் பயிற்சி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாவோ விஸ்ட்டுகள் நேபாள மாவோ போராளிகளுக்கு அடைக்கலமும், பயிற்சியும் அளிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புலிகள் நான்கு பெண் தற்கொலை குண்டுதாரிகளின் படையணிகளை உருவாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<b>Thinakural</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மாவோ போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி - by Vaanampaadi - 07-10-2005, 06:40 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 07:04 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 07:07 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 08:17 PM
[No subject] - by வினித் - 07-10-2005, 08:47 PM
[No subject] - by ஈழத்துளி - 07-12-2005, 01:37 PM
[No subject] - by ஈழத்துளி - 07-12-2005, 02:16 PM
[No subject] - by Vaanampaadi - 07-12-2005, 03:44 PM
[No subject] - by Vaanampaadi - 07-12-2005, 03:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)