07-10-2005, 08:30 AM
<b>பட அதிபரை தாக்க முயன்ற ஜெய் ஆகாஷ்</b>
<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/Akash-300.jpg' border='0' alt='user posted image'>
தெலுங்குப் பட அதிபரை தாக்க முயன்றதாக நடிகர் ஜெய் ஆகாஷ் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் அகத்தியனின் ராமகிருஷ்ணா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய் ஆகாஷ். இதன் பிறகு இவர் குருதேவா, அமுதே, செவ்வேல் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் நடித்த குருதேவா படம், குரு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படம் சமீபத்தில் ஆந்திராவில் வெளியானது. ஆனால் இந்தப் படம் சரியாக ஓடவில்லை.
குரு படத்திற்கு சரியாக விளம்பரம் செய்யாதது தான் ஓடாததற்கு காரணம் என்று கூறி பட அதிபர் அங்கம ராவ் மீது ஜெய் ஆகாஷ் அதிருப்தி அடைந்துள்ளார். இதையடுத்து அங்கம ராவை சந்தித்த நடிகர் ஜெய் ஆகாஷ், படம் ஓடாததற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் பட அதிபர் அங்கம ராவ் போலீஸில் ஜெய் ஆகாஷ் மீது புகார் செய்தார். அதில் தன்னை ஜெய் ஆகாஷ் தாக்க முயன்றதாக கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் ஜெய் ஆகாஷை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தெலுங்குப் படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின் மற்ற பட அதிபர்கள் தலையிட்டு இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து அங்கம ராவ் தனது புகாரை வாபஸ் பெற்றார்.
that'stamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>